தனிமை | உஷார்

Sunday, October 11, 2009

நன்றி: தினத்தந்தி

டெல்லியில் உள்ள பிரபல நிறுவனம் ஒன்றில் கணவருக்கு மிக உயர்ந்த பணி. அவர் வயது 54. மனைவிக்கு 44. ஒரே மகளான 19 வயது அழகுப் பெண் என்ஜினீயரிங் படித்துக் கொண்டிருக்கிறாள்.

அம்மா, மகள் இருவரும் தனிமையில் வீட்டில் இருப்பார்கள். இளம் வயதான இன்னொரு வேலைக்காரப் பெண் அடிக்கடி வீட்டிற்கு வந்து வேலைகளை செய்துவிட்டுப் போவாள். அவள் மிகுந்த நம்பிக்கையான வேலைக்காரி என்பதால், அம்மா வீட்டில் இல்லாமல் இருந்தாலும் வீட்டைத் திறக்கவும், சமையல் அறைக்கு மட்டும் சென்று வேலைகளை கவனிக்கவும் உரிமை கொடுத்து வைத்திருந்தார்கள்.

என்ஜினீயரிங் படிக்கும் மகளை எப்போதும் அம்மா கண்காணித்துக் கொண்டிருப்பாள். ஏனென்றால் கல்லூரிக்கு போய்விட்டு வீடு திரும்பியதும், பெரும் பாலான நேரம் அவள் செல்போனில் பேசிக் கொண்டே இருப்பாள். அதில் ஆண்கள் குரலும் கேட்கும். `அளவோடு பெண்களிடம் மட்டும் செல் போனில் பேசு! உன்னைப் போன்ற இளம் மாணவி கள் ஆண்களிடம் செல்லில் பேசி தவறான வழியில் கெட்டுப்போகிறார்கள்' என்று அவ்வப் போது மகளுக்கு உபதேசம் செய்து கொண்டிருப்பாள்.

டெல்லியில் வேலை பார்க்கும் கணவர் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை ஊருக்கு வந்து மனைவி, மகளை பார்த்துவிட்டுப் போவார். மற்றபடி தினமும் இருமுறையாவது செல்போனில் மனைவியிடம் பேசிவிடுவார்.

கடந்த ஆறு மாத காலமாக கணவர் போனில் பேசும் போதெல்லாம் மகளைப் பற்றி நிறையவே குறை சொல்லத் தொடங்கினாள், மனைவி. `மகள் எப்போதும் செல்போனில் தான் பேசிக்கொண்டிருக்கிறாள். என்ன நடக்கப்போகுதோ... நீங்கள் சீக்கிரமாக ஊருக்கு வந்து அவளை கண்டியுங்கள்' என்று எச்சரிக்கை கொடுத்துக் கொண்டே இருந்தாள். அவரும் மகளை நினைத்து பயங்கொள்ளத் தொடங்கினார்.

விரைவாக ஊருக்கு வந்து, மகளிடம் பேசி அவள் காதல் வசப்பட்டிருப்பது போல் ஏதாவது சூழ்நிலை உருவாகி இருந்தால் அதைக் கண்டறிந்து மகளை நல்வழிப்படுத்தவேண்டும் என்று அவர் முடிவு செய்தார். மனைவியிடம் தான் கிளம்பி வரும் தகவலையும் சொன்னார்.

அவர் கிளம்பி வருவதற்கு இரண்டு நாட்களே இருக்க, மதிய நேரத்தில் வீட்டிற்கு வருகிறாள், வேலைக்காரி. வீடு பூட்டிக் கிடக்க, தன்னிடம் உள்ள சாவியை பயன்படுத்தி வீட்டைத் திறந்தவள் கண்களில் பளிச்சென்று அந்த கடிதம் தென்பட்டது. "தனிமை என்னை வாட்டியதால் காதலன் ஒருவனோடு எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவனோடு நான் செல்கிறேன். யாரும் என்னைத் தேட வேண்டாம்' என்றிருந்தது. உடனே டெல்லியில் இருந்தவருக்கு போன் போட்டு, கடித விஷயத்தை சொல்ல, `19 வயதிலே என் மகள் இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டாளே.. அவள் எதிர்காலம் என்ன ஆகுமோ?' என்று அவர் போனிலே அழ, சுதாரித்துக் கொண்ட வேலைக்காரி, `அய்யா ஓடியது உங்கள் பெண் அல்ல.. உங்கள் மனைவி..' என்று சொன்னதும் அவர் அப்படியே அதிர்ந்து, மூர்ச்சையற்று விழுந்துவிட்டார்.

டீன்ஏஜ் பெண்களின் அம்மாக்கள்கூட இப்படி தனிமைக்கு உள்பட்டு தவறான வழியை தேடிக்கொண்டிக்கிறார்கள்.

0 comments:

Donate a Link for Green World - NGO

You can donate a link from your blog or website for Green World - NGO, A Non-Profit Social Welfare Organization functioning at Erode.
This is what you will see.



Optionally use this Widget installer to add this link to your blogger blog.

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP