தோல்வி...
Friday, December 29, 2006
கோடி நட்சத்திரம்
கூடி வரவேற்கிறது. வா தோழா!
தவழ்ந்து திரியும் மேகம்
மழையாய் உனைத் தழுவ
தவியாய் தவிக்கிறது. வா தோழா!
அந்தி நிலவில்
மயங்கும் பொழுதில்
மல்லிகை வாசத்தோடு வீசும்
மெல்லிய தென்றல்...
ஒரு புயலுடன் உரசி
லட்சிய நெருப்பைப் பற்ற வைக்கும்
இது ஒரு புத்துணர்வு சுவாசம்!
இங்கு உனக்கே எல்லாம் விசுவாசம்
இன்னும் தோல்வியோடு உனக்கென்ன சகவாசம்?
தளராமல் நடைபோடு...
இனி வரும் உதயம்
உனக்கே உபயம்.
-சிவாஜிRead more...
Labels:
சிவாஜி
Subscribe to:
Posts (Atom)