Showing posts with label நற்சிந்தனை. Show all posts
Showing posts with label நற்சிந்தனை. Show all posts

தொடர்ந்து போராடினால் ஒரு நாள எதிர்ப்புகள் முறிந்துவிடும்

Sunday, May 3, 2009

என்னுடைய கீழியல்பு முன்பு செய்த அதே முட்டாள்தனமான காரியங்களைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. நீர் ஒருவர்தாம் அதை மாற்ற முடியும். அதற்கு உமது நிபந்தனைகள் எவை?

அன்னை:

1. உன்னால் மாறமுடியும் என்று உறுதியாக நம்ப வேண்டும்.

2. கீழியல்பு சொல்லும் சமாதானங்களை ஏற்காமல் மாற வேண்டும் என்று சங்கற்பிக்க வேண்டும்.

3. எத்தனை தடவைகள் விழுந்தாலும் அந்த சங்கற்பத்தில் விடாப்பிடியாக இருக்க வேண்டும்.

4. நீ பெறும் உதவியில் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்க வேண்டும்.

உன்னுடைய ஆர்வத்திலும் முயற்சியிலும் அயராதிரு, பின்னடைவுகளினால் சோர்ந்து போய்விடாதே. தொடக்கத்தில் அவ்வாறு ஏற்படவே செய்யும். அவற்றைச் சட்டை செய்யாமல் நீ தொடர்ந்து போராடினால் ஒரு நாள எதிர்ப்புகள் முறிந்துவிடும், கஷ்டங்கள் மறைந்துவிடும். என் உதவி உனக்கு எப்போதும் உண்டு, ஆனால் நீ அதைப் பயன்படுத்திக் கொள்ளவும் உன்னுடைய திறமைகளையே நம்பியிராமல் அதை நம்பியிருக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும்.

வைகற
(ஸ்ரீஅர‌வி‌ந்ஆ‌சிரம‌ககாலா‌ண்டவெ‌ளி‌யீடு)

நன்றி: வெப்துனியா

Read more...

இது நான் அதிக உயரத்திற்கு உயர முடியும் என்பதைக் காட்டுகிறது


அன்னை
நீ உன்னையே கூர்ந்து நோக்கினால் நீ பெற வேண்டிய நற்குணத்திற்கு நேர் எதிரானது உன்னுள் இருப்பதைக் காண்பாய் ("நற்குணம்" என்பதை அதன் மிக விரிவான, மிக உயர்ந்த பொருளில் பயன்படுத்துகிறேன்) உனக்கு ஒரு சிறப்புக் குறிக்கோள், ஒரு சிறப்புத் தெய்வப் பணி, ஒரு சிறப்பு அனுபூதி, உனக்கே உரிய ஒன்று உள்ளது. அதே சமயம் எல்லாத் தடைகளும் உன்னுள் இருக்கின்றன.

எப்பொழுதுமே உன்னுள்ளே உள்ள நிழலுருவமும் ஒளியும் சமமாக இருப்பதை நீ காண்பாய். உன்னிடம் ஒரு திறமை இருக்கும், அதற்கு எதிர்மறையானதும் இருக்கும். ஆனால் உன்னுள் மிகக் கரிய துளை, அடர்த்தியான ஒரு நிழலுரு இருக்கக் கண்டால், உன்னுள் எங்கோ ஒரு பெரிய ஒளி உள்ளது என்று நீ உறுதியாக நம்பலாம். அந்த ஒளியை அடைய மற்றதை எப்படிப் பயன்படுத்துவது என்று கற்றுக் கொள்வது உன் பொறுப்பு. உன்னிடம் மிகப்பெரிய பலவீனம் இருக்கக் கண்டால் நம்பிக்கை இழந்து விடாதே, ஏனெனில் அது மிகப் பெரிய தெய்வீக பலத்திற்கு அடையாளமாக இருக்கக் கூடும். "நான் இப்படி இருக்கிறேன், என்னால் வேறு வகையாக இருக்க முடியாது" என்று சொல்லாதே. அது உண்மை அன்று, நீ அதற்கு எதிரானதாக இருக்க வேண்டும் என்பதுதான். "அப்படி இருப்பதற்கு" காரணமே, உன்னுடைய எல்லாக் கஷ்டங்களும் இருக்கக் காரணமே அவற்றை நீ உருமாற்றஞ்செய்ய வேண்டும் என்பதுதான்.

நீ இதைப் புரிந்து கொண்டுவிட்டால் பல கவலைகள் மறைந்துவிடும், நீ மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பாய், மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பாய். உன்னிடம் மிகக்கரிய துளைகள் இருக்கக் கண்டால், நீ "இது நான் அதிக உயரத்திற்கு உயர முடியும் என்பதைக் காட்டுகிறது" என்று சொல்லுவாய், படுகுழி மிக ஆழமாக இருந்தால், "இது நான் அதிக உயரத்திற்கு ஏற முடியும்" என்பதைக் காட்டுகிறது என்று சொல்லுவாய். பிரபஞ்ச நோக்கிலிருந்தும் இதுதான் உண்மை.

தன்னில் உள்ள இருண்ட பக்கத்தைப் பார்த்த கணத்தில், அதைப் பார்த்து நீ "இது நான்" என்று சொல்லாமல், "இல்லை, இது என்னுடைய நிழலுரு, இது என்னைவிட்டு வெளியே எறிய வேண்டிய ஒன்று" என்று சொன்னால், நீ மறுபக்கத்தின் ஒளியை அதன்மீது பாய்ச்சுவாய், இரண்டையும் நேருக்கு நேர் சந்திக்கச் செய்வாய். இப்பொழுது மறுபக்கத்தின் ஞானத்தையும் ஒளியையும் கொண்டு நிழலுருவை அமைதியாக இருக்கும்படி கட்டாயப்படுத்த வேண்டும்.

அதற்கு அறிவூட்ட முயலக்கூடாது, அது மிகவும் கடினம்... முதலில் அதிலிருந்து தொலைவில் விலகி நிற்க வேண்டும், பிறகு அதன் மீது ஒரு பெரிய ஒளியைச் செலுத்தி, அது திரும்பிவர முடியாதபடி வெகு தொலைவிற்கு வீசி எறிய வேண்டும். சில சமயங்களில் அதை மாற்ற முடியும், ஆனால் அது மிகவும் அரிது. சில சமயங்களில் அதன் மீது மிக வலுவான ஒளியைச் செலுத்தி அதை உருமாற்றஞ் செய்ய முடியும். அப்பொழுது அது உன்னுடைய ஜீவனின் உண்மை எதுவோ அதுவாக மாறும்.

ஆனால் இது அரிது.. அப்படிச் செய்ய முடியும். பொதுவாக, மிகச் சிறந்தது, "இல்லை, இது நான் அல்ல! அது எனக்கு வேண்டாம்! இந்த இயக்கத்திற்கும் எனக்கும் சம்பந்தமில்லை, அது என் இயல்பிற்கு மாறுபட்ட ஒன்று, என்னைப் பொறுத்தவரை அது இல்லை!" என்று சொல்லுவதுதான். இவ்வாறு மீண்டும் மீண்டும் வற்புறுத்துவதன் மூலமும் அதை வெளியே விரட்டுவதன் மூலமும் முடிவில் ஒருவன் தன்னை அதிலிருந்து பிரித்துக் கொள்ள முடியும்.

முதலாவது தன்னிடமுள்ள முரண்பாட்டை உணரும் அளவுக்கு ஒருவனிடம் தெளிவும் நேர்மையும் இருக்க வேண்டும்.


ந‌ன்‌றி -வைகற
(ஸ்ரீஅர‌வி‌ந்ஆ‌சிரம‌ககாலா‌ண்டவெ‌ளி‌யீடு)

நன்றி: வெப்துனியா

Read more...

உனக்கு நீயே எஜமான்


அன்னை
விஷயங்கள், சூழ்நிலைகள், வாழ்வின் எல்லா இயக்கங்களும், செயல்களும் உணர்வின்மேல் உண்டாக்கும் விளைவு அநேகமாக முற்றிலு‌நாம் இவ்விஷயங்கள்பால் கொள்ளும் மனப்பான்மையையே பொறுத்திருக்கும் உணர்வுநிலை ஒன்றுள்ளது. விஷயங்கள் தம்மளவில் நல்லவையோ கெட்டவையோ அல்ல என்பதை அறியும் அளவிற்கு உணர்வு பெறும் நேரம் ஒன்று உள்ளது: நம்மைப் பொறுத்தமட்டிலேதான் அவை நல்லவையாகவோ கெட்டவையாகவோ இருக்கின்றன; அவற்றினால் நம்மீது ஏற்படும் விளைவு முற்றிலும் அவற்றின்பால் நாம் கொள்ளும் மனப்பான்மையைப் பொறுத்ததாகவே இருக்கும்.

அதை இறைவனது கொடையாக இறைவனது அருளாக முழு இசைவின் விளைவாக நாம் எடுத்துக் கொண்டோமானால் நாம் அதிக உணர்வு பெறவும், அதிக வலிமை பெறவும், அதிக உண்மையானவர்களாக ஆகவும் உதவும்; ஆனால் அதையே சிறிதுகூட மாற்றமில்லாமல் அதேமாதிரி சூழ்நிலை - அதையே விதியின் அடியாக, நமக்குத் தீங்கிழைக்க விரும்பும் தீய சக்தியாக எடுத்துக் கொண்டோமானால் அது நம்மைச் சுருங்கச் செய்யும், சோர்வடையச் செய்யும், நம்மிடமிருந்து உணர்வையும் வலிமையையும் இசைவையும் போக்கிவிடும், இருப்பினும் சந்தர்ப்பமோ மிகத்துல்லியமாய் அதே மாதிரியானதே - நீங்கள் எல்லோரும் இந்த அனுபவம் பெற வேண்டும்; ஏனெனில் இந்த அனுபவம் பெற்றால், நீ சுதந்திரமாயிருப்பாய். உனக்கு நீயே எஜமானனாக இருப்பாய் அல்லது சூழ்நிலைகள் உன் கட்டுப்பாட்டிற்கு அடங்கியவையாக இருக்கும்.

இது முற்றிலும் நீ கொள்ளும் மனப்பான்மையையே பொறுத்தது. இது தலையில் நிகழும் அனுபவம் அல்ல - தலையில் தொடங்கக்கூடும் - இது உடலிலேயே நிகழக்கூடிய அனுபவம். ஆனால் இதில் சித்தி பெற நிறைய வேலை தேவை. ஒரு முனைப்பு தன்னாட்சி, சடத்தினுள் உணர்வைத் தள்ளுதல் எல்லாம் தேவை; ஆனால் அதன் விளைவாக உடல் வெளியிலிருந்து வரும் அதிர்ச்சிகளை ஏற்கும் முறைக்கு ஏற்றபடி, விளைவு மாறுபடலாம். இந்தத் துறையில் நீ பூரணம் பெற்றுவிட்டால், விபத்துகள் ஏற்படாமல் தடுத்துவிடலாம். அவ்வாறு நடக்கும் என்று நம்புகிறேன். அது சாத்தியம், சாத்தியம் மட்டுமல்ல, நிச்சயம். அதற்கு இன்னும் ஓர் அடி முன்னால் செல்ல வேண்டும், அவ்வளவுதான். அதாவது உன்னிடம் இந்த ஆற்றல் இருக்கிறது - ஏற்கனவே மனத்தில் முழுமையாக தடுக்க முடியாதபடி சித்தியாகிவிட்டது - சந்தர்ப்பங்கள் மீது செயல்பட்டு அவை உன் மீது செயல்படுவதை முழுமையாக மாற்றிவிடும் ஆற்றல் இருக்கிறது‌; அந்த ஆற்றல் சடத்தினுள் இறங்க முடியும், தூலப் பொருளினினுள், உடலின் அணுக்களுள் இறங்கி, அதே ஆற்றலை உடலுக்கு, அதைச் சுற்றியுள்ள பொருட்கள் சம்பந்தமாகக் கொடுக்க முடியும்.

இது வெறும் நம்பிக்கை அல்ல, அனுபவத்திலிருந்து வரும் உறுதிப்பாடு.

இது உனது அனுபவ எல்லையை விரிவாக்குகிறது; இது உருமாற்றத்திற்கு இட்டுச்செல்லும் பாதையில் மற்றுமோர் படி.

நாம்தாம் வரம்புகளை உண்டாக்கிக் கொள்கிறோம். நாம் பொழுதெல்லாம், "அது சாத்தியம், ஆனால் அந்த இன்னொன்று சாத்தியமில்லை; என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். நாமேதாம் காலமெல்லாம் நம்மை அடிமைகளைப் போல நமது வரம்புகளாகிய சிறைக்குள்ளே, வாழ்க்கையின் விதிகள் எதையுமே தெரிந்து கொள்ளாத நமது அறிவற்ற குறுகிய அஞ்ஞான புலனின் சிறைக்குள்ளே நம்மை அடைத்துவைக்கிறோம். வாழ்க்கையின் விதிகள் நீங்கள் நினைப்பது போலோ, மிகப்பெரிய அறிவாளிகள் நினைப்பது போலோ இல்லவே இல்லை. அவை முற்றிலும் வேறாக உள்ளன. இந்த வழியில் ஓர் அடி எடுத்து வைத்தால் - நீ அதைக் கண்டுபிடிக்கத் தொடங்குவாய்.

வைகறை
(ஸ்ரீஅர‌வி‌ந்த ஆ‌சிரம‌க் காலா‌ண்டு வெ‌ளி‌யீடு)

நன்றி: வெப்துனியா

Read more...

SADHGURU: Why Relationships

Thursday, April 23, 2009

Read more...

Donate a Link for Green World - NGO

You can donate a link from your blog or website for Green World - NGO, A Non-Profit Social Welfare Organization functioning at Erode.
This is what you will see.



Optionally use this Widget installer to add this link to your blogger blog.

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP