நட்பும் நட்புணர்வும் - ஓஷோ

Thursday, April 26, 2012


இந்த ஓஷோ தமிழாக்கம் இங்கிருந்து எடுக்கப்பட்டது.

2. நட்பும் நட்புணர்வும்
 
பழகிக் கொண்டிருக்கும் மனிதர்களுடன் நட்பு கொள்வது என்பது ஆரம்பத்திலேயே
தவறான அடி எடுத்து வைப்பதாகும். நட்பு என்பது பகிர்தலாக இருக்க வேண்டும்.
உன்னிடம் ஏதாவது இருந்தால் பகிர்ந்து கொள். யார் உன்னிடம் பகிர்ந்து கொள்ள
தயாராக இருக்கிறார்களோ அவர்கள் நண்பர்கள். அது தேவை பற்றி. கேள்வி அல்ல.
நீ அபாயத்தில் இருக்கும்போது ஒரு நண்பன் வந்து உதவ வேண்டும் என்ற தேவையேகிடையாது. அது சம்பந்தமில்லாதது. அவன் வரலாம், வராமலும் இருக்கலாம்
ஆனால் அவன் வர வில்லையென்றால் நீ குற்றமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
அவன் வந்தால் நீ மிகவும் நன்றியோடு இரு, வரவில்லையென்றால் பரவாயில்லை.
வருவதும் வராததும் அவனிஷ்டம். நீ அவனை கட்டாயப்படுத்த வேண்டியதில்லை,
நீ அவனை குற்றம் சொல்லக் கூடாது. உனக்கு கெட்ட எண்ணம் எதுவும் இருக்கக்
கூடாது. எனக்குத் தேவை ஏற்படும் போது நீ ஏன் வரவில்லை என்ன வகையான
நண்பன் நீ என்று கேள்வி கேட்கக் கூடாது
 
நட்பு என்பது சந்தைக்கடைக்குரியது அல்ல. நட்பு என்பது கோவிலுக்குரிய மிக
அரிதான விஷயங்களில் ஒன்றாகும், அது கடைவீதிக்குரியது அல்ல. ஆனால்
உனக்கு அந்த வகையான நட்பைப் பற்றி எதுவும் தெரியாது. நீ அதைக் கற்றுக்
கொள்ள வேண்டும்.
 
நட்பு என்பது மிகப் பெரும் கலை. அன்பின் பின்னே ஒரு இயற்கையின் உந்துதல்
இருக்கும், நட்பின் பின்னே எந்த இயற்கையின் உந்துதலும் இருக்காது. நட்பு என்பது
தன்னுணர்வு கொண்டது. அன்பு தன்னுணர்வு இல்லாதது.
 
நாம் அன்பு என்று அழைப்பது மனித உணர்வை விட அதிக விலங்குணர்வு
கொண்டது. நட்பு முழுக்க முழுக்க மனித உணர்வு கொண்டது. உன்
உயிரியலிலேயே உள்கட்டமைப்பு கொண்டதல்ல அது. அது உயிரியலை
சேர்ந்ததல்ல. ஆகவேதான் ஒருவர் நட்பில் உயர்கிறார், அவர் நட்பில்
விழுவதில்லை. அது ஆன்மீக பரிமாணம் கொண்டது.
 
யார் என்னுடைய உண்மையான நண்பன் என கேள்வி கேட்காதே, பதிலாக நான்
உண்மையான நண்பனா எனக் கேள். எப்போதும் உன்னைக் குறித்துப் பார். நாம் எப்போதும் அடுத்தவர்களைக் குறித்துத்தான் அக்கறை கொள்கிறோம். மற்றவர்களை
பற்றி எதையும் உறுதியாக சொல்வது முடியாத காரியம். அது தேவையுமில்லை.
நீ எப்படி அடுத்தவரைப் பற்றி உறுதி கூற முடியும்  
 
மற்றவர் எப்போதும் மாறுதல்தான். இந்த வினாடி அவர் அன்பாக இருக்கக் கூடும்,
அடுத்த வினாடி அவருக்கு அன்பு இல்லாமல் இருக்கக் கூடும். அங்கு எந்த
உறுதிமொழியும் கிடையாது. நீ உன்னைப் பற்றி வேண்டுமானால் உறுதியாக
கூறலாம், ஆனால் அதுவும் இந்தக் கணம் மட்டுமே.
 
எதிர்காலம் முழுமையையும் நினைக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த கணத்தைப்
பற்றி, நிகழ்காலத்தைப் பற்றி மட்டும் நினைத்தால் போதும். நிகழ்காலத்தில் வாழு.
இப்போது இந்த கணத்தில் நட்பும் நட்பின் மணமும் நிரம்பியிருக்கும் போது எதற்காக
அடுத்த கணத்தைப் பற்றி கவலைப் பட வேண்டும் அடுத்த கணம் இந்த
கணத்திலிருந்தே பிறக்கிறது. அது உயர்ந்த ஆழ்ந்த இயல்பாக இருந்தாக வேண்டும்.
அது அதே மணத்தை உயர்ந்த இடங்களுக்கும் கொண்டு வரும். அதைப் பற்றி
நினைக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த கணத்தை ஆழ்ந்த நட்புடன் வாழு.
 
நட்பு யாரையும் குறிப்பாக நினைத்து இருந்தாக வேண்டிய அவசியம் இல்லை. - நீ குறிப்பிட்ட ஆட்களுடன்தான் நட்பாக இருக்க முடியும் என்பது பழைமையான கருத்து.
வெறுமனே நட்பாக இரு. நட்பை உருவாக்கிக் கொள்வதற்கு பதிலாக நட்புணர்வை
உருவாக்கிக் கொள். அது உனது இருப்பின் இயல்பாக மாறட்டும். உன்னைச் சுற்றி
சூழலை உருவாக்கிக் கொள். அப்போதுதான் உன்னருகில் யார் நெருங்கி வந்தாலும்
நீ அவர்களுடன் நட்புணர்வோடு இருக்க முடியும்.
 
இந்த பிரபஞ்சம் முழுவதும் நட்புணர்வாக வேண்டும். நீ இந்த இயற்கையுடன்
நட்புணர்வுடன் இருந்தால் ஆயிரம் பங்கு அதிகமாக அது உன்னுடன் நட்புணர்வுடன்
இருக்கும். அதே வழியில் ஆனால் அதிகமான அளவு அது உனக்கு திருப்பித்
தரும். அது உன்னை எதிரொலிக்கும்.
 
The Dhammapada: The way of the Buddha 

Read more...

சிரிப்பு - ஓஷோ

இந்த ஓஷோ தமிழாக்கம் இங்கிருந்து எடுக்கப்பட்டது.


1.சிரிப்பு
மனிதன் முழுமையடைய மிக முக்கியமான பகுதி நகைச்சுவை உணர்ச்சியாகும். அது அவனை ஆரோக்கியமாக வைத்திருக்கும், இளமையாக வைத்திருக்கும், புதிதாக
வைத்திருக்கும். மேலும் நூற்றாண்டுகளாக இந்த சோகமான மக்கள் மதத்தை
பிடித்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் மசூதியிலிருந்து, கோவிலிருந்து, சர்சுகளிலிருந்து சிரிப்பை வெளியேற்றி விட்டனர். என்று இந்த புனிதமான இடங்களுக்குள் சிரிப்பு நுழைகிறதோ அன்றுதான் இவை உண்மையிலேயே
புனிதமான இடங்களாக மாறும், ஏனெனில் அப்போதுதான் அவை முழுமை
அடைகின்றன.
சிரிப்பு ஒன்றுதான் மனிதனை விலங்கிலிருந்து வேறு படுத்திக் காட்டும் குணம்.
மனிதனால் மட்டுமே முட்டாள்தனத்தை, மடத்தனத்தை பார்க்க முடியும். இயற்கையின்
வேடிக்கையை உணரக் கூடிய தன்னுணர்வும் ஆற்றலும் மனிதனுக்கு மட்டுமே உண்டு.
இது ஒரு பிரபஞ்ச விளையாட்டு, இது கடுகடுப்புக்குரிய விஷயமல்ல.
கடுகடுப்பு ஒரு வியாதி. ஆனால் கடுகடுப்புக்கு மரியாதை தரப்படுகிறது, கௌரவம்
தரப்படுகிரது, பாராட்டப்படுகிறது. ஒரு துறவியாக இருக்க வேண்டுமென்றால் நீ
கடுகடுப்பாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். அதனால்தான் நோய் கொண்ட
மக்கள் மட்டுமே மதத்தில் ஆர்வம் காட்டுகின்றனர். - சிரிக்க தெரியாத மக்கள். மேலும்
சிரிக்க தெரியாத மக்கள் மனித இனத்தைவிட குறைவானவர்கள். இன்னும் மனித
இனமாகாதவர்கள். - அவர்களது இருப்பு தெய்வீகமானது என்று எப்படி சொல்ல அது
சாத்தியமற்றது. அவர்கள் இன்னும் மனிதர்களாகவே இல்லை. மனிதன்தான்
தெய்வத்திற்க்கும் விலங்குக்கும் இடையே உள்ளவன். அதனால்தான் நான் சிரிப்புக்கு
நகைச்சுவை உணர்வுக்கு அளவற்ற மரியாதை கொடுக்கிறேன்.
சிரிப்பு பிரார்த்தனையை விட அதிக புனிதமானது. ஏனெனில் பிரார்த்தனையை எந்த மடையன் வேண்டுமானாலும் செய்யலாம். அதற்கு புத்திசாலித்தனம் தேவை
இல்லை. சிரிப்புக்கு புத்திசாலித்தனம் தேவை. அதற்கு விஷயங்களை விரைவாக
பார்க்கும் அறிவு வேண்டும், அந்த வினாடியில் அங்கிருக்கும் மனம் வேண்டும். ஒரு
ஜோக்கை விவரிக்க இயலாது. நீ அதை புரிந்து கொள்ள வேண்டும் இல்லாவிடில்
நீ அதை தவற விட்டு விடுவாய். அதை விவரித்து கூறினால் அது அதன் முழு அழகையும் இழந்து விடும். எனவே ஜோக்கை விவரிக்க முடியாது. நீ அதை
உடனடியாக புரிந்து கொள்ள வேண்டும். உன்னால் அதை உடனடியாக புரிந்து
கொள்ள முடியா விட்டால் நீ அதை முயற்சி செய்து புரிந்து கொள்ளலாம், ஆனால்
உன்னால் அப்போது அதன் பொருளைத்தான் புரிந்து கொள்ள முடியும், அப்போது
ஜோக் அங்கிருக்காது. அது அந்த வினாடியில்தான் இருக்கிறது.
நகைச்சுவைக்கு அங்கிருக்க வேண்டும், முழுமையாக அந்த வினாடியில் அங்கே
இருக்க வேண்டும். அது பகுத்தாயும் விஷயமல்ல, அது உள்ளே உதிக்கும் விஷயம்.
உன்னால் முழுமையாக சிரிக்க முடியுமென்றால் அங்கே புரிந்து கொள்ள வேண்டிய
சில விஷயங்கள் உள்ளன. ஆழமான சிரிப்பில் அகம்பாவம் மறைந்து விடுகிறது.
அது அங்கே காணப்படுவதில்லை. அகம்பாவம், சிரிப்பு இரண்டையும் ஒன்றாக
வைத்திருக்க முடியாது. அகம்பாவம் அங்கிருக்குமானால் அது உன்னை கடுகடுப்பாக
வைத்திருக்கும். எல்லா ஆணவக்காரர்களும் கடுகடுப்பானவர்களே, எல்லா கடுகடுப்பானவர்களும் ஆணவம் பிடித்தவர்களே.
சிரிக்க வேண்டுமென்றால் நீ குழந்தை போலாக வேண்டும் - ஆணவமின்றி. மேலும் நீ
சிரிக்கும்போது சிரிப்பு அங்கிருக்கும், நீ இருக்க மாட்டாய். சிரிப்பு நின்றவுடன் நீ
திரும்பவும் வருவாய். சிரிப்பு தொலைவுக்கு சென்றவுடன், அது தேய்ந்தவுடன் நீ
வருவாய், ஆணவம் மறுபடி வரும். ஆனால் சிரிக்கும்போது நீ ஆணவமற்ற நிலையின்
தரிசனத்தை காண்பாய்.
இரண்டு செயல்களின் போதுதான் நீ ஆணவமற்ற நிலையின் தரிசனத்தை எளிதாக
பெற முடியும். ஒன்று சிரிப்பு, மற்றொன்று நடனம். நடனம் உடல்ரீதியான முறை, ஆணவமற்ற நிலையை உணரக்கூடிய உடல் வழி. நடனமாடுபவர் நடனத்தில்
கரைந்து விடும்போது அவர் அங்கிருப்பதில்லை, நடனம் மட்டுமே இருக்கிறது.
சிரிப்பு நடனத்தை விட மென்மையானது, உள்ளிருப்பது. ஆனால் அதற்கும் அதே
அளவு மணம் உண்டு. நீ சிரிக்கும்போது...... அது உன் அடி வயிற்றிலிருந்து வரும்
சிரிப்பாக இருக்க வேண்டும். மேலோட்டமானதாக இருக்கக் கூடாது, வெறும் புன்சிரிப்பாக இருக்க கூடாது, நடிப்பாக இருக்கக் கூடாது.
கட்டாயத்திற்காகவோ, நடிப்பாகவோ, புன்சிரிப்பாகவோ இருந்தால் அது ஒரு அடி
வயிற்றிலிருந்து வருவதாக இருக்காது. மேம்போக்கானதாக இருக்கும். மேல்மட்டத்தில்
நீ அதை சமாளிக்கலாம். அப்போது உன்னால் நான் சிரிப்பைப் பற்றி என்ன சொல்கிறேன் என்பதைப் புரிந்து கொள்ள முடியாது.
சிரிக்கும்போது உனது முழு உடலும் உனது முழு இருப்பும் அதில் ஈடுபடும்போது
அங்கே திடீரென ஒரு தரிசனம் தோன்றும். ஒரு கணம் கடந்த காலமும் மறையும்,
எதிர்காலமும் மறையும், ஆணவமும் மறையும், எல்லாமும் மறையும் - அங்கே சிரிப்பு
மட்டுமே இருக்கும். அப்படி சிரிப்பு மட்டுமே இருக்கும் அந்த கணத்தில் இந்த முழு இயற்கையும் சிரித்துக் கொண்டிருப்பதை உன்னால் பார்க்க முடியும்.

Read more...

தொடுதல், காத்திருத்தல், தேடுதல்


இந்த ஓஷோ தமிழாக்கம் இங்கிருந்து எடுக்கப்பட்டது.

1. தொடுதல்
 
தியானம் ஒவ்வொரு புலன்களையும் கூர்மையாக்கும், உனது தொடுதலைக் கூட. ஒரு தியானிப்பவனின் தொடுதலில் கதகதப்பும் அன்பும் முழுமையாக இருப்பதை நீ உணரலாம். அவர் மூலமாக ஏதோ ஒன்று பாய்வதை நீ உணரலாம். அவரிடம் சந்தோஷம் அபிரிதமாக இருப்பதை நீ காணலாம், திருப்தியை நீ பார்க்கலாம், அவரால் அதை கட்டுப்படுத்த முடியாது. அது அவரைச் சுற்றி பாய்ந்தோடிக் கொண்டிருக்கும்.
 
தாமரை தண்ணீரில்தான் இருக்கிறது, ஆனால் தண்ணீரால் அதை தொட முடியாது.
 
ஆழமான அன்புடன் யாராவது உனது கைகளை தொடும்போது உனது கைகளும் உயிர் பெறுகின்றன.
 
ஒரு மலரைத் தொடும்போது இயற்கை எப்படி உள்ளதோ அப்படியே உன்னால் அனுபவப்பட முடியும்.
 
நம்பிக்கைகள் உனது வாழ்வைத் தொட முடியாது, ஏனெனில் நம்பிக்கைகள் வெறும் கருவிகளே.
 
பாதத்தின் கீழே உள்ள தொடுஉணர்ச்சியின் மூலமாக பாதையை உணர்ந்து பார்.
 
2. காத்திருத்தல்
 
காத்திருத்தல் தூய்மையானதாக இருக்க வேண்டும். காத்திருத்தலை அதற்காகவே அதன் அனுபவத்திற்காகவே கொண்டாடு. எதற்காக என்று கேள்வி எழ வேண்டிய அவசியமே இல்லாமல் அதன் தூய்மைக்காக, அதன் வெகுளித்தனத்திற்காக, அதன் வாழ்த்துக்காக வெறுமனே காத்திரு. காத்திரு -
 
காத்திருத்தலின் அழகை உன்னால் பார்க்க முடியும். என்ன நிகழப் போகிறதென்று அறியாமல் காத்திருத்தல் மட்டுமே செய்யும்போது அதை பார்ப்பாய்.
 
காத்திருத்தல் உன்னை உருக வைக்கும், மையம் தன்னை வெளிப்படுத்த,
உனது காத்திருத்தல் உதவி செய்யும்.
 
காத்திருத்தலுக்கு எந்த பொருளும் கிடையாது, அதனால் தான் அது
தியானமாகிறது.
 
காத்திருந்து காத்திருந்து காத்திருந்து நீ காலியாவதுதான் பிரார்த்தனை.
 
காத்திருத்தல், முழுமை உன்னை முழுமையாக ஆட்படுத்திக் கொள்ள
அனுமதிக்கும்.
 
ஒரு உண்மையாகவே காத்திருப்பவனால் அவன் எதற்காக
காத்திருக்கிறான் என்ற கேள்விக்கு பதில் சொல்லவே முடியாது.
 
3. தேடுதல்
 
யாத்திரை கேள்வி கேட்டு, தேடி, துழாவுவதில்தான் ஆரம்பமாகிறது.
ஆரம்பிக்க வேறு எந்த வழியும் இல்லை. வாழ்வின் பொருள் என்ன என்று
கேள்வி கேட்காத வரை, இந்த பிரபஞ்சத்தின் அடி ஆழ மையத்தை தேடாத
வரை, நீ துளி கூட நகர்வதேயில்லை. ஒரு அடி கூட எடுத்து வைப்பதேயில்லை. அப்போதுதான் அந்த தேடுதல் துவங்குகிறது.
 
நீ பணத்தை தேடுகிறாய் என்றாலே பதவியை, அதிகாரத்தை,
கௌரவத்தை தேடுகிறாய் என்றுதான் பொருள்.
 
தேடுதலும் ஒரு வகையான மெலிதான ஆசைதான்.
 
உன்னிடம் எல்லாமும் உள்ளது, ஆனாலும் நீ எல்லா இடத்திலும்
தேடுகிறாய் என்பது வேடிக்கையான ஒன்றுதான்.
 
நீ எதையாவது செய்ய முயற்சிக்கும்போது, நீ உனது
அகம்பாவத்திற்கு தீனி தேடுகிறாய் என்று அர்த்தம்.
 
உன்னால் எங்கு உருவாக்க முடிகிறதோ அந்த திசையில் தேட
துவங்கு.

Read more...

சுவாசத்தை கவனித்தல் - தியானம்


இந்த ஓஷோ தமிழாக்கம் இங்கிருந்து எடுக்கப்பட்டது.

1. சுவாசத்தை கவனித்தல்                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            
எல்லா விதமான தியான முறைகளையும் உனக்கு சொல்லித் தர
வேண்டிய அவசியம் இல்லை. எளிதானதாகவும், எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக்
கூடியதாகவும் எளிமையானதாகவும் இருக்கும் ஒரு முறையை நான் தேர்ந்தெடுத்துள்ளேன். இது உலகம் முழுவதும் பரவட்டும். இதை சுவாசத்தை
கவனித்தல் என நான் அழைக்கிறேன், இது மிகவும் எளிய முறை.
 
எப்போது - நீ அமைதியாக அமர்ந்திருக்கக் கூடிய எல்லா நேரங்களிலும்,
ரயிலிலோ, பஸ்ஸிலோ, விமானத்திலோ பயணம் செல்லும் சமயத்தில்..
 
காலம் - 2 நிமிடங்கள் முதல் எவ்வளவு நேரம் நீ செய்ய விரும்புகிறாயோ
அது வரை.
 
முதல் படி - உனது கண்களை மூடி உனது சுவாசத்தை கவனி. உள்ளே
செல்லும்போது நீயும் அதனுடன் உள்ளே செல், வெளியே வரும்போது
நீயும் அதனுடன் வெளியே வா.
 
நீ சுவாசத்துடன் உள்ளே சென்று பின் அதனுடன் வெளியே வருவது என்பது
போன்று செய்யும் சமயத்தில் நீ இரண்டு விஷயங்களைப் பற்றி உணர்வடைவாய்.
நீ சுவாசத்துடன் உள்ளே செல்லும்போது அது வெளியே வருவதற்காக திரும்பும் முன்
ஒரு கணம் சுவாசத்தில் இடைவெளி வரும். இதேபோல சுவாசத்தை வெளியே
விடும்போதும் நிகழும். திரும்பவும் உள்ளே இழுக்கும் முன் ஒரு கணம் இடைவெளி
வரும். நீ அதை கவனிக்க கவனிக்க இந்த இரண்டு நிலைகளும் மேலும் மேலும்
தெளிவாக, பெரியதாக மாறும். ஒரு சுவாசம் உள்ளே போய் ஒரு கணம் நிற்கும்,
பின் வெளி வரும். வெளியே வந்தது ஒரு கணம் நின்று பின் உள்ளே போகும்.
இந்த இடைவெளி பெரிதாகிக் கொண்டே போகும்.
 
பின் ஒரு சமயம் வரும். இந்த இடைவெளி மிகச் சரியாக நாற்பத்தி எட்டு நிமிடங்கள்
இது 10,000 வருடங்களுக்கு முன்பே கணக்கிடப்பட்டுள்ளது. இந்த முறையை
உபயோகித்த அத்தனை சாதகர்களாலும் மிகச் சரியாக இதே நேரம் கண்டுபிடிக்கப்
பட்டுள்ளது. அப்படி இடைவெளி வந்து விட்டால் நீ வீடு வந்து சேர்ந்து விடுவாய்.
தியானம் தரக்கூடிய எல்லாவற்றையும் நீ பெற்று விடுவாய்.
 
உன் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர் யாருக்கும் நீ செய்வது என்னவென்று தெரியாது.
அதை குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்தான் செய்ய வேண்டும் என்று கிடையாது. நீ
இதை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம். ஒரு நாளில் எவ்வளவு முறை
முடிகிறதோ அவ்வளவு தடவை செய்யலாம். சில சமயங்களில் வெறும் இரண்டு
நிமிடங்கள் கூட செய்யலாம்.
 
சில நேரங்களில் படுக்கையில் படுத்திருப்பாய். ஆனால் தூக்கம் வராது. தூக்கத்தைப்பற்றி கவலைப்படாதே. அதைச் செய். இது இரண்டு வேலைகளையும்
செய்யும். இது ஆழ்ந்த அமைதியான தியானத்தைத் தரும், இதைச் செய்வதன் மூலம் தூக்கமும் வந்து விடும். ஆனால் நீ எழுந்திருக்கும் போதுதான் தூங்கி விட்டிருப்பதே
உனக்குத் தெரியும்.
 
ஆனால் மிகவும் வேறுபட்ட விஷயம் என்னவென்றால் நீ தியானம் செய்தவாறே
தூங்கி விட்டிருந்தால் நீ காலையில் எழும்போதும் தியான தன்மையோடு எழுவாய்.
அப்படி என்றால் ஆழ் மனதில் எங்கோ ஆழத்தில் நீ அறியாவண்ணம் இந்த முறை
தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது என்றுதானே அர்த்தம். உனது இரவு முழுவதும் தியானமாக மாறி விட்டிருக்கிறது, இது உனக்கு கிடைக்கக் கூடிய மிக
அதிக அளவு நேரமாகும். உனது தூக்கம் மிகவும் அமைதியானதாகவும்,
ஓய்வானதாகவும் புத்துணர்வு தரக்கூடியதாகவும் மிகவும் வேறுபட்ட குணத்தில்
இருக்கும்.
 
ஆறு மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் வரை இந்த கவனித்தல் தொடர்கிறது.
காலையில் நீ விழித்தெழுந்த உடன் உனது சுவாசத்தை கவனிப்பதை நீ தொடர்ந்து
செய்ய ஆரம்பிப்பாய். அது உனக்கு வியப்பளிக்கும்.     
The Last Testament

Read more...

ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் சங்கமம் 2010 - அனுபவம்

Monday, December 27, 2010

நான் நிகழ்ச்சிக்கு பெருமாள் முருகன் சார் பேசிக் கொண்டிருக்கும் போது தான் அரங்கினுள் நுழைந்தேன். நுழைவாயிலில் ரெண்டு குட்டிப் பொண்ணுங்க பேனாவும் குறிப்பு நோட்டும் கூடவே ஊர்ப் பழமைங்கற புத்தகமும் கொடுத்து வரவேற்றனர்.

சிறுகதைகளைப் பற்றி பெருமாள் முருகன் சார் பேசிக் கொண்டிருந்தார். சிறுகதை எழுத நினைப்பவர்களுக்கு என அவர் சொன்னாலும், அவர் பேச்சை நான் உள்வாங்கிக் கொண்டது நம் அனுபவத்தை எப்படி வெளிப்படுத்துவது என்றுதான். சிறுகதை என்பது கருத்து சொல்வதாக இல்லாமல் நம் அனுபவத்தினூடே படிப்பவரை பயணிக்க வைக்க வேண்டும், படிப்பவர் தம் பிடித்தமான கருத்துக்களை தேடிப் பொறுக்க முயற்சித்தாலும் கூட. அதுவே காலம் காலத்திற்கும் நிலைக்கும் படைப்பாக அமையும். அதுவே இலக்கியமும் கூட என்பதை மிக அழகாக பிசிறில்லாமல் அவர் பேசிய விதம் அவரின் ஆழ்ந்த அனுபவப் பகிர்வாக இருந்தது. எடுத்துக்காட்டுக்களின் ஊடே அவர் சுட்டிக்காட்டிய நுணுக்கங்களும், அவை பிடிபட வேண்டுமானால் வாசிப்பும், வாசிப்பும் பிடிபட அவர் தந்த ஆவலான கதைகளும் ஒரு தேர்ந்த கலைஞனுக்கே உரித்தானவை. நான் மிகவும் ரசித்தேன்.

அவர் பேச்சினூடே நான் எடுத்த சில குறிப்புகள்:
1. தமிழகம்.இன் - சிறுகதைகள் தொகுப்புத் தளம்
2. கந்தவர்வன் எழுதிய அதிசயம் சிறுகதை - வித்தியாசப்பட்ட கதைக்கள உதாரணம்
3. ஜானகிராமன் எழுதிய காண்டாமணி சிறுகதை
4. உடனடியாக சிறுகதைகள் வாசிக்க 100 சிறுகதைகள் - வலைப்பூ முகவரியை குறிப்பெடுக்க மறந்துவிட்டேன்.

அடுத்து பாமரன் அவர்கள் உலக மொக்கையர்களே ஒன்றுபடுங்கள் என்ற தலைப்பில் சுவாரஸ்யமான பகிர்வை தந்தார். ரசித்தேன்.

அடுத்து குறும்படம் எடுக்கலாம் வாங்கன்னு தமிழ்ஸ்டூடியோ.காம் அருண் பேசினார். ஒரு குறும்படம் எடுக்கும் ஐடியா உங்களுக்கு இருந்தா கண்டிப்பா இவரைத் தொடர்பு கொள்ளலாம். ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இலவசமாக பயிற்சியும் ஆலோசனையும் தரோம் வாங்க என்ற அன்பான அழைப்புடன் மிகச் சுருக்கமாக முடித்துக் கொண்டார். அவர் குறும்படம்னா என்னனு சுட்டிக்காட்ட சொன்ன தொங்கட்டான் சிறுமி கதை நல்லா இருந்த்தது. முடிவாக அது ஒரு கவிதைன்னு சொன்னப்ப குறும்படம் ஓட்ட என்ன வேலை செய்யனும்னு புரிஞ்ச மாதிரி இருந்தது.

அடுத்து உலகத் திரைப்படங்கள் தலைப்பில் சிதம்பரம்.T பேசினார். வணிக மற்றும் முழுமையான பொழுதுபோக்குப் படங்கள் தான் தமிழ் சினிமாவில் மலிந்து கிடக்கின்றன, ஒன்றிரண்டு தவிர்த்து என்றார். நம்மூருக்கு ஹாலிவுட்டில் எடுக்கப்படும் உலகத்தரத்திலான படங்கள் கூட வருவதில்லை. அவற்றிலும் பிரமாண்ட செலவு, பிரமிப்பான காட்சிகள், விறு விறுப்பு, கவர்ச்சி கொண்ட படங்கள் தான் இங்கு வருகின்றன என்று அவர் சொன்ன செய்தி ஒரு இனம் புரியாத ஏக்கத்தை தந்தது. எல்லாரும் உலகத்தரம் உலகத்தரம்ன்னு சொல்றதுனால, இவங்க எதைத்தான் உலகப்படம்ன்னு சொல்றாங்கன்னு தெரிஞ்சுக்கறதுக்காகவே அந்தப் படங்களைப் பார்க்க ஒரு ஆவல் ஏற்படுகிறது.

அடுத்து கதிர் சாரின் உரிமையான கண்டிப்புடன் அனைவரும் அரங்கினுள் அமைதி காக்க, ஒவ்வொருவரும் தங்களை நேர்த்தியாக அறிமுகம் செய்து கொண்டோம்.

அடுத்து மதிய விருந்து. சைவம் அசைவம்ன்னு கல்யாணப் பந்தியும் கிடா வெட்டும்  சேர்த்து வச்ச மாதிரி நிறைவான சாப்பாடு.

அடுத்து நிழற்படங்களில் நேர்த்தி என்ற தலைப்பில் ’கருவாயன்’  சுரேஷ்பாபு அழகான புகைப்படங்களோடு மிக எளிமையாக சொல்லிக் கொடுத்தார். மேடையேறி பேசுவது இது தான் முதல் தடவை என்று சொன்னாலும், மேடைக்கு பழகியிருக்கவெல்லாம் அவசியமில்லை, பேசவேண்டிய விசயத்தில் வல்லுனராக இருந்தாலே போதும் என்பது அவரிடம் இருந்து எனக்கு கிடைத்த கூடுதல் டானிக். புகைப்படத்தின் தரம் இரண்டே விசயத்துலதான் இருக்கு. ஒண்ணு கேமிராவுக்குள்ள வருகிற வெளிச்சம், இரண்டாவது  ஸ்பீடு -ன்னு ஆரம்பிக்கும் போதே இவ்வளவுதானாங்கிற மாதிரி உணர்வு ஏற்பட்டது. தொடர்ந்து எந்தக் கேமராவை எப்படிப் புடிக்கணும், படம் எடுக்குறதுக்கு முன்னாடி என்ன முன்னேற்பாடுகளை செய்யனும், படம் எடுக்கும் போது என்னென்ன விசயங்களை கவனிக்கனும், படம் எடுத்த பிறகு எடிட் பண்ணி சரி செய்ய வேண்டியிருந்தா கவனிக்க வேண்டியது என ஒரு நேர்த்தியான செயல் விளக்கம் அதற்குத் தகுந்த உதாரணப் படங்களுடன் தந்தார். கேமராவைப் பொருத்தும், படம் எடுக்குறவங்களப் பொருத்தும் படம் எப்படி அமையும், இப்படி நிறைய டிப்ஸ் கொடுத்தார். இவருடைய அறிமுகத்துல, இவருடைய படங்கள் நிறைய பரிசுகளும் விருதுகளும் வாங்கியிருக்கின்றன என்று சொன்னார்கள். அவற்றின் அடிப்படை ரகசியங்களை அதே நேர்த்தியுடன் பகிர்ந்து கொண்டார்.

அடுத்து இன்றைய இணையமும் வலைப்பூக்களும் என்ற தலைப்பில் ஓசை செல்லா இணையத்தோடு அவரின் ஆரம்ப காலம் முதல் இன்று வரையிலான தொடர்பையும் வளர்ச்சியையும் பகிர்ந்து கொண்டார். இணையத்தின் வலிமையையும் அதில் தமிழ் வலைப்பூவின் ஆரம்ப காலத்தையும், அப்போது தமிழ் பாண்ட்-ல் இருந்த சிரமத்தையும், அவரின் புது முயற்சிகள் எப்படி வெற்றி பெற்றன, வலைபூக்கள் சமூகத்தில் ஏற்படுத்தி வரும் மாற்றங்கள் என அவர் பகிர்ந்து கொண்ட விசயங்கள், ஒரு வெப் டெவலப்பர் (Web Developer) என்ற அளவில் எனக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் தந்தது.

அடுத்து நிழற்படங்களின் வழியே ஆவணப்படுத்துதல் என்ற தலைப்பில் லட்சுமனன் மற்றும் அவர் நண்பர் வினோத் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்பட ஆவணங்கள் (திருமணம் மற்றும் பழங்குடியினர் வாழ்வியல்) காட்டப்பட்டன. அவை எடுக்கப்படும் நோக்கமும் விதமும் லட்சுமணன் அவரால் விளக்கப்பட்டன. படங்கள் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாக இருந்தன. கூடவே தேநீர் விருந்தும் அளிக்கப்பட்டது.

அடுத்து ஈரோடு கதிர் சார் ஈரோடு வலைப்பதிவு குழும உறுப்பினர்களை மேடைக்கு அழைத்து அறிமுகம் காட்டி, அனைவருக்கும் நன்றி நவின்று சேர்தளம் வசம் ஒப்படைத்தார்.



அடுத்து சேர்தளம், திருப்பூர் வலைப்பதிவு குழும உறுப்பினர்களால் கலந்துரையாடல் ஒருங்கிணைக்கப்பட்டது. சுவாரஸ்யமான கேள்விகள் முன் வைக்கப்பட்டு கருத்துக்களும், அனுபவங்களும் பதிவர்களால் பகிர்ந்துகொள்ளப்பட்டன.

வலைப்பதிவு என்பது தனிநபருக்கானது, சுதந்திரமானது என்னும் போது அதை சமூகக்குழுமம் எனும் முடிச்சுக்குள் கொண்டுவரும் போது முரண்பாடு ஏற்படுவது இயல்புதானோ என்றெண்ணுகிறேன். தனிமனித சுதந்திரத்தைக் காப்பாற்றப் பாடுபடும் அளவிற்கு பரஸ்பரம் மற்றவர்களின் சுதந்திரத்தை மதிக்கும் முயற்சியில் அடிக்கடி சறுக்கல் உண்டாகத்தான் செய்கிறது என்பதை கலந்துரையாடல் நிகழ்ச்சி மூலம் நான் உணர்ந்ததாக கொள்கிறேன். சுதந்திரத்திற்கே உரிய பொறுப்பும், சமூகத்துக்கே உரிய கட்டுப்பாடும் ஒரே அர்த்தத்தில் முரண்பட்டுக் கொள்வதாக நான் நினைத்தேன்.

உண்மையில் ஈரோடு வலைப்பதிவர்கள்  சங்கமம் 2010, எனக்கு மிக நிறைவாக அமைந்தது. நன்றி.

Read more...

சங்கமம் - 2010

Sunday, December 5, 2010

வலைபதிவர்கள், வாசகர்கள் சங்கமம் - 2010 க்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். மேலும் விபரங்களுக்கு இங்கு பார்க்கவும்.

Read more...

தெரிஞ்சத தான சாமி எழுத முடியும்? தெரியாதத தெரிஞ்ச மாதிரி காட்டிக்க தெரியாதப்பா எனக்கு!

Tuesday, October 12, 2010

உண்மையிலே தன் சொந்த அறிவைக் கொண்டு பதில் எழுதியுள்ள இந்த மாணவனை நினைத்தால் நெஞ்சம் பூரிப்படைகிறது. கொஞ்சமும் வினாவை விட்டு விலகாமல் தனக்கு தெரிந்த தகவல்களைக் கொண்டு அலங்கரித்து இருப்பது சூப்பர். ஒரே பதிலை ஒவ்வொரு தாளிலும் படித்து படித்து சலிப்படைவதைக் காட்டிலும், இந்த மாதிரி பதில் எழுதினால் ஆசிரியர்களும் தூங்கமால் திருத்தலாம். இந்த துணிச்சல் தான் பாராட்டுக்குரியது! மகிழ்ச்சி மலரட்டும்!








வழி: மெயிலில் வந்தது.

Read more...

Power of Media

Friday, August 13, 2010

A Servant enrolled his donkey in a race & won.

The Local news paper read:'SERVANT's ASS WON',


The king was so upset with this kind of publicity that he ordered the servant not to enter the donkey in next race..

 
Next day..the local paper headline read:'KING SCRATCHES SERVANT'S ASS'..


This was too much for the king, he ordered the servant to get rid of the donkey.He gave the donkey to the queen.

 
The local paper heading the news: "QUEEN HAS THE BEST ASS IN THE TOWN"


The king fainted.Queen sold the donkey to a farmer for 10$.

Next day paper read: "QUEEN SELLS HER ASS FOR $10.."


This was too much,King ordered the queen to buy back the donkey & lead it to jungle.


The next day Headlines: "QUEEN ANNOUNCES HER ASS IS WILD & FREE".


The king was buried next day..
Power of media...!!

Read more...

A T T I T U D E

Once there was loving couple traveling in a bus in a mountainous area.
 
They decided to get down at some place. 


After the couple got down at some place the bus moved on. 

As the bus moved on, a huge rock fell on the bus from the mountain and crushed the bus to crumbs. 

Everybody on board was killed.

The couple upon seeing that, said, 


"We wish we were on that bus".

Read more...

தலைப்பு வரவில்லை!

Sunday, August 8, 2010

மர்மங்கள் அவிழும்
மர்ம இரவுக்குள்
மோகப் பயணம் புகும்
மனமே நீ திரும்புதல் அரிது.
அழுவதும் நீயே; பின் அஞ்சுவதும் நீயே!
அரவணைத்துத் துணைவரும் நிழலின் தரிசனம் காணவேண்டாவோ?
உனக்குத் தைரியம் சொல்லும் அந்தத் தைரியம் யாரோ!

Read more...

Donate a Link for Green World - NGO

You can donate a link from your blog or website for Green World - NGO, A Non-Profit Social Welfare Organization functioning at Erode.
This is what you will see.



Optionally use this Widget installer to add this link to your blogger blog.

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP