Thursday, July 17, 2008
கனவில், கனவு உண்மையாகவே தோன்றுகிறது. தினமும் கனவு வருகிறது. தினசரி காலையில் அது பொய்யாய்ப் போய் விடுகிறது. மறுபடியும் இரவில் கனவு. அந்தக் கனவு மறுபடியும் உண்மையாகவே தோன்றுகிறது. கனவு காணும்போது அது கனவு என்று உணர வாய்ப்பே இல்லை. காலையில்தான் அது சாத்தியமாகிறது.
என்ன நடக்கிறது? நீங்கள் அதே ஆள்தானே? கனவில் அது எதார்த்தமாகவே தெரிகிறது. எப்படி எதனோடு ஒப்பிடுவது? அது உண்மையன்று என்று எப்படிச் சொல்வது? எதனோடு ஒப்பிடுவது? அப்போது அது ஒன்றே எதார்த்த உண்மை. மற்றவை எல்லாம் உண்மையல்ல. அதனால் ஒப்பிட வழியில்லை. கனவுகள் எல்லாம் உண்மையல்ல என்று இப்போது நீங்கள் சொல்லலாம். இந்த எதார்த்தத்தோடு ஒப்பிடும்போது தான் கனவுகள் பொய் என்று தெரிகின்றன.
ஒரு விழிப்புணர்வு இருக்கிறது - விழிப்புணர்வின் எதார்த்தத்தோடு ஒப்பிடும் போது, இந்த எதார்த்தம் முழுவதும் பொய்யாய்ப் போய்விடுகிறது.
-ஓஷோ Read more...