காதல் ஆத்திச்சூடி - தபூ சங்கர்

Saturday, February 6, 2010

வளிடம் மதி மயங்கு!

உனக்காகப் பிறந்தவள், உனக்கென்று ஒதுக்கப்பட்ட காதல் கணத்தில்... சட்டென்று உன் கண் முன்னே தோன்றுவாள்.

அந்த தேவ நிமிஷத்தில் நீ தொலைந்துபோவாய்! உன் நண்பர்கள், அவளது வீதியில் தொலைந்துகிடக்கும் உன்னைக் கண்டெடுத்து வந்து உன்னிடம் கொடுப்பார்கள். அது அவர்கள் நட்பின் கடமை. உன் காதலின் கடமை என்ன தெரியுமா?

உன் நண்பர்கள் கொடுத்த உன்னை எடுத்துக்கொண்டு உடனே அவளிடம் ஓட வேண்டும். மீண்டும் தொலைப்பதற்காக!

யிரம் முறை அவள் கண்ணில் படு!
அவள் திரும்பிப் பார்க்கும் இடத்தில் எல்லாம் நீ அவள் கண்ணில் பட வேண்டும்.

அதிசயமாய் அதிகாலை வாசல் தெளிக்க அவள் வரும் நாளில் பனித் துளி மாதிரி பார்வையில் படு. குடும்பத்தோடு அவள் இரண்டாம் ஆட்டம் பார்த்துவிட்டுத் திரும்பும் நள்ளிரவிலும் அவள் கண்ணில் படு. எங்கெங்கும் அவள் உன்னைப் பார்க்க வேண்டும்.

இவன் ஒருத்தனா... இல்லை ஏழு பேரா என அவள் குழம்ப வேண்டும்.
குட்டையைக் குழப்பி மீன் பிடிப் பதைப் போல, அவள் மனதைக் குழப்பி மனதைப் பிடிக்கும் வித்தை இது!

தயத்தை அலங்கரி!
ஒருத்தி நுழையப் போகிறாள் என்பது தெரிந்த நொடியிலேயே, உள்ளங்கை அளவிலிருந்து உலக அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துவிடும் இதயம்! ஆகவே இதயத்தை அலங்கரி.

இனி அவளுக்கும் உனக்கும் ஏற்படப் போகும் நிகழ்வுகளின் ஆல்பங்களை அடுக்கிவைக்க, அதன் சுவர் முழுவதும் அலமாரிகளை அடி.

அவளை வரவேற்க வளைவுகளும், விளையாட ஊஞ்சலும், நீராடத் தடாகமும், துயில்வதற்கு மெத்தையும், முக்கியமாய் அவள் தன்னை அடிக்கடி அழகு பார்த்துக்கொள்ள அவளுயரக் கண்ணாடியும் அமை. அவள் கேட்க, துடிப்புகளில் இனிய இசையை உண்டாக்கு.

சீக்கிரம்... அதோ அவள் வந்துகொண்டு இருக்கிறாள்!

ர்க்கும் படி நட!
இது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால், அவளை ஈர்ப்பதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் கஷ்டப்படலாம்.ஏன் என்றால், அவ்வளவு கஷ்டத்துக்கும் பரிசாகக் கிடைக்கப்போவது அவளின் அழகான இதயம்.

முதன்முதலாய் உன் கண்களை அவள் கண்கள் சந்திக்கிறபோதுதான் உன் காதல் பரிபூரணமாய் ஆசீர்வதிக்கப் படுகிறது.

கண்ணியம் என்பது அரசியலில் இருக்கிறதோ இல்லையோ, அவளை ஈர்க்கும் உன் முயற்சியில் அது இருந்தால், வெகு சீக்கிரமே அவள் மனதில் பட்டொளி வீசிப் பறக்கும் உன் கொடி!

றுத்தாமல் பார்!
காதலிப்பதால் கிடைக்கும் சுகத்தில் பாதி சுகம் பார்த்துக் கொண்டு இருப்பதில்தான் இருக்கிறது என்கிறார் வள்ளுவர். பார்வைகள் ஒருபோதும் பார்ப்பதால் தீர்வதில்லை. மாறாக வளர்ந்துகொண்டே இருக்கிறது.

உன் பார்வை அவள் அழகைத் தின்னக் கூடியதாக இருக்கக் கூடாது. அவள் அழகுக்கு மகுடம் சூட்டுவதாக இருக்க வேண்டும். உன் பார்வையால் தனது அழகு வளர்வதாக அவள் உணர வேண்டும்.

இப்படி எல்லாம் எப்படிப் பார்ப்பதென்று நீ எங்கேயும் கற்றுக்கொள்ளத் தேவை இல்லை. மனதில் காதலை மட்டும் வைத்து, ஒரு மலரைப் பார்ப்பதைப் போல் அவளைப்பார். உனது கண்களால் உன் உள்ளத்தில் உள்ள காதலுக்கு ஓராயிரம் ஊற்றுக்கண்கள் திறக்கும்!
  
தியமின்றிக் காவல் செய்! 
உலகத்திலேயே அழகான வேலை, உன் காதலியைக் காவல் காக்கும் கருப்பண்ணசாமி வேலைதான். நீ அவளைப் பின்தொடர்வதை அவள் தெரிந்துகொண்டால், எங்குவேண்டு மானாலும் துணிச்சலுடன் போவாள்.

அவள் அப்பா மாதிரியோ அண்ணன் மாதிரியோ 'எங்க போற' என்று நீ கேள்வியும் கேட்க மாட்டாய். அவளுக்கு ஏதாவது ஆபத்தென்றால் நீ பொங்குவாய் என்கிற மதர்ப்பே அதற்குக் காரணம்.

என்றாவது ஒரு நாள். குரைக்கும் நாய்க்குப் பயந்தோ, பாய்ந்து வரும் மாட்டைக் கண்டோ அத்தனை பேரையும் விட்டுவிட்டு உன் பின்னால் ஓடி வந்து ஒளிவாள். அதுதான் உன் காவலுக்கும் காதலுக்கும் அவள் தரும் மரியாதை!

தற்கும் வழியாதே!
தவறுதலாய் அவள் கைக்குட்டை கீழே விழுவதைப் பார்த்துவிட்டால் ஓடிப்போய் சிதறு தேங்காய்ப் பொறுக்கு பவனைப் போல் பொறுக்காதே. செடிக்கு அடியில் கிடக்கும் மலரைப் போல் நிதானமாய் எடு.

அதை அவளிடம் தருகையில் 'உங்க கர்ச்சீப். மிஸ் பண்ணிட்டீங்க' என்று வழியாதே. 'இது உன் கர்ச்சீப்பா' என்று பந்தாவாகக் கேள்.

இன்னொரு தெய்வாதீனத் தருணத்தில் நீயும் அவளும் அருகருகே நிற்க வேண்டிய வாய்ப்பு கிடைக்கலாம். அப்படி அவள் அருகில் நிற்கையில் உனக்குக் கைகால்கள் உதறலாம். அல்லது சட்டைக் காலரைத் தூக்கி விட்டுக்கொண்டு வானத்தைப் பார்த்து ஏகாந்தமாய் நமட்டுச்சிரிப்பு சிரிக்கத் தோன்றலாம். இதில் நீ எதைச் செய்தாலும், உனக்கு அவள் போட்டுவைத்திருக்கும் மதிப்பெண் அம்பேல் ஆகிவிடும்.

ஒன்றும் தெரியாத பையனைப் போல அமைதியாய் நில். அமைதி ஓர் அற்புதமான வசிய மருந்து!

கலைவனாய் இரு!
நீ எத்தனையோ காதல் காவியங் களைப் பார்த்திருக்கலாம். எத்தனையோ காதல் படங்களைப் பார்த்திருக்கலாம். ஆனால், அவை எதிலிருந்தும் உனக்கான காதலை நீ எடுத்திருக்க முடியாது.

அது அவளிடம் மட்டுமே கொடுத்தனுப்பப்பட்டு இருக்கிறது.

அதை, அவளை நீ பார்த்த நொடியிலேயே உன்னிடம் சேர்த்துவிட்டாள்.ஆகையால், காதலில் அவளே உனக்கு குரு.

அதற்கான குருதட்சணையாக, அவள் உன் உயிரைக் கேட்டாலும், ஏகலைவன் போல் யோசிக்காமல் கொய்து தரத் தயராய் இருக்க வேண்டும் நீ. ஆனால், அப்படிக் கேட்க அவள் ஒன்றும் துரோணர் இல்லை. என்றாலும் அவள் எப்போது எது கேட்டாலும் தருவதற்குத் தயராய் நீ ஏகலைவனாகவே  இரு!

ம்புலனிலும் அவளை வை!
கண்டும் கேட்டும் உண்டும் நுகர்ந்தும் தொட்டும் இன்புறும் ஐம்புலன்களின் இன்பமும் ஒன்றாய் இருப்பது பெண்ணிடம் மட்டுமே என்று அடித்துச் சொல்கிறது திருக்குறள். உன் காதலியும் இப்படித்தான் உன் ஐம்புலன்களையும் சொக்கவைக்கப் போகிறாள். ஆனால், அதற்கு முன்... உன் ஐம்புலனாலும் அவளை நீ காதலி.

கண்களில் அவள் உருவத்தை வை,
காதுகளில் அவள் குரலை வை,
சுவாசத்தில் அவள் வாசம் வை,
உதடுகளில் அவள் பெயரை வை,
உணர்வில் அவள் உயிரை வை!

ரு நாள் காதலைச் சொல்!
அவள் மகிழ்வாய் இருக்கும் நேரம் பார்த்து, ''நான் ரொம்ப நாளாய் ஒருத்தியைக் காதலிக்கிறேன் அவள் நீயா?' என்று கேள்.

புன்னகையை அடக்கிக்கொண்டு 'ஏன்... அவள் யாரென்று உனக்குத் தெரியாதா?' என்பாள்.

'அவளை நினைக்க ஆரம்பித்த பிறகு என்னையே நான் மறந்துவிட்ட தால், அவள் யார் என்பது தெரியாமல் போய்விட்டது' என்று சொல்.

'உன்னை ஞாபகப்படுத்திக்கொள். அவள் யாரென்பது தெரிந்துவிடும்' என்பாள்.

'அவளை நான் மறந்தால்தானே என் ஞாபகம் எனக்கு வரும்' என்று கேள்.

'அவளை மறந்துவிட வேண்டியது தானே' என்பாள்.

'என் ஆயுள் காலம் வரை அவளை ஞாபகம் வைத்திருப்பேன்' என்பது நிஜமில்லைதான்.
ஆனால், அவளை நான் ஞாபகம் வைத்திருக்கும்வரைதான்... 'நான் உயிரோடு இருப்பேன் என்பது மட்டும் கண்டிப்பாய் நிஜம்' என்று சொல்.

'அப்படியானால் நீ காதலிக்கும் பெண் நான்தான்' என்பாள் தலையைக் குனிந்து.

'எனக்குத் தெரியும்' என்று சொல்.

செல்லமாய் கோபிப்பாள். பிறகு கண்டிப்பாய் கிடைக்கும் அழகான பிகு முத்தம்!

ர் உலகம் செய்!
அந்த உலகம் அற்புதமானது. அங்கே கடற்கரை, திரையரங்குகள் எல்லாம் உண்டு. ஆனால் உங்களைத் தவிர வேற யாருமே இல்லை. அங்கே சில்லென சூரியன் உதிக்கும்... கதகதப்பாய் மழை பெய்யும்.

அந்த உலகம் எங்கே இருக்கிறது என்று கத்தாதே. நீ உன் காதலியோடு எங்கெல்லாம் செல்கிறாயோ அங்கெல்லாம் அந்த உலகம் இருக்கும்.

ஆனால், நீங்கள் போகும் இடமெல்லாம் உங்கள் பின்னாலேயே வரும் ஒரு ஆப்பிள் மரம். அவசரப்பட்டு அந்த மரக்கனியைத் தின்றுவிடாதீர்கள். அதற்கின்னும் காலமும் கனியவில்லை. ஆப்பிளும் கனியவில்லை!

ஒளவியும் ஒளவாமலும் பழகு!
இது என்ன வார்த்தை என்று முழிக்காதே. தொட்டும் தொடாமலும், பட்டும் படாமலும், அணைத்தும் அணைக்காமலும் என்ற வார்த்தைகள் எல்லாம் கலந்தெடுத்த, காதலுக்கென்றே கண்டுபிடிக்கப்பட்ட அழகான வார்த்தை இது.

தொடுவானம் எப்போதும் பூமியைத் தொட்டுக்கொண்டு இருப்பது மாதிரித்தான் தெரியும். ஆனால் தொடாது. அதற்காக வானமும் பூமியும் தொட்டுக்கொள்வதே இல்லை என்று அர்த்தம் அல்ல. மாபெரும் வானத்துக்குள்தான் இருக்கிறது இந்த பூமி. அப்படித்தான் நீயும் அவளும் பழக வேண்டும். அவள் வானமாய்... நீ பூமியாய்!

காதல் காலம் என்பது, பார்ப்பதற்கும் பேசுவதற்குமே போதாது. ஆகையால் இப்போதைக்கு அவளைப் பார்த்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இரு.

தொடுதலையும் படுதலையும் அவ்வப்போது அனிச்சையாய் காதலே அரங்கேற்றிக்கொள்ளும்!

-தபூ சங்கர்
-நன்றி: ஆனந்த விகடன் (19.02.06)



Read more...

டீம் எவரெஸ்ட்

Friday, February 5, 2010

சமீபத்தில் புதிய தலைமுறையில் டாக்டர். அப்துல் கலாமின் இளைய இந்தியா தொடரில் செயல்வீரர்கள் என்ற வரிசையில் "எவரெஸ்ட் டீம்" பற்றிய கட்டுரையை படித்தேன். மிகவும் அருமையான சேவை செய்கிறார்கள் இவர்கள். படித்துப் பாருங்கள்...

எவரெஸ்ட் என்பது உலகின் உயர்ந்த சிகரம். மலையேறும் வீரன் சிகரத்தைத் தொட்ட மகிழ்ச்சிக்கு இணையான மகிழ்ச்சி, ஏதேனும் சிறு உதவியை மற்றவர்களுக்கு செய்துப் பார்த்தாலும் கிடைக்கும். எனவேதான் உயர்ந்த உள்ளங்களின் சங்கமமான இந்த அமைப்புக்கும் ‘எவரெஸ்ட்’ என்று பெயர்.

சுமார் மூவாயிரத்து ஐநூறு பேர் இவ்வமைப்பில் தங்களை தன்னார்வலர்களாக இணைத்துக் கொண்டு சமூகத்துக்கு, தங்களால் ஆன பங்களிப்பினை செய்துவருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள்.

எவரெஸ்ட்டுக்கு என்று அலுவலகம் கூட கிடையாது. ஒருவரை ஒருவர் இவர்கள் பெரும்பாலும் சந்தித்தது கூட இல்லை. இண்டர்நெட்தான் இவர்களை ஒருங்கிணைக்கிறது. யாருக்காவது உதவி தேவை என்பதை அறிந்தால், உடனடியாக இண்டர்நெட்டில் தங்கள் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புகிறார்கள். அச்சமயத்தில் இயன்றவர்கள் உடனடியாக பங்களிக்கிறார்கள். அவ்வப்போது இவர்களில் சிலர் ஒன்றுகூடி களச்சேவையும் செய்வதுண்டு.
கட்டுரையாசிரியரின் இணையதளத்தில் மேலும் படிக்க இங்கு கிளிக் பண்ணுங்க.
 
மேலும் சில இணைப்புகள் - இணையத்தில் தேடிய போது கிடைத்தவை இவை:

கிழக்கு பதிப்பக எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி அவர்களின்  எவரெஸ்ட் டீம் பற்றிய பதிவு
http://thoughtsintamil.blogspot.com/2009/09/blog-post_27.html

எவரெஸ்ட் டீம் நிறுவனர் கார்த்தீபனின் சமூக இணையதள பக்கம்
http://ngogateway.com/ngo-profiles/kartheeban-chandramohan-team-everest/

டீம் எவரெஸ்ட் வலைப்பூ
http://teameverest.wordpress.com

Read more...

Donate a Link for Green World - NGO

You can donate a link from your blog or website for Green World - NGO, A Non-Profit Social Welfare Organization functioning at Erode.
This is what you will see.



Optionally use this Widget installer to add this link to your blogger blog.

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP