Thursday, November 27, 2008

ஒரு முழுக்குடிகாரன் ரயில் பயணித்துக் கொண்டிருந்தான். உடல் முழுவதும் விஸ்கி மற்றும் இன்னபிற சாராய நெடிகள். உடைகள் அழுக்காக இருந்தன. அவன் குளித்து இரண்டு அமாவாசைகளாவது ஆகியிருக்கும் போல! அவன் ஆடைகளில் லிப்ஸ்டிக் கறைகள் இருந்தன. சட்டைப் பையில் பாதி குடித்துவிட்டு மிச்சம் வைத்திருந்த ஜின் பாட்டில் ஒன்று எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.

ஆனால் அவன் சலமின்றி, அன்றைய செய்தித்தாள் ஒன்றைப் பிரித்துப் படித்துக் கொண்டிருந்தான்.

ரயிலில் கூட்டமில்லை.

எதிரில் சந்நியாசி ஒருவர் அமர்ந்து சக பயணியாக அவனுடன் பயணித்துக் கொண்டிருந்தார்.

சில நிமிடங்கள் சென்றிருக்கும், அவன் திடீரென்று சந்நியாசியை நோக்கிக் கேட்டான்.

"சுவாமி, மூட்டு வலி எதனால் வருகிறது?"

"எப்படிப்பட்ட மூட்டுவலி?" இது சாமியார்

"கை, கால்களை மடக்கி நீட்ட முடியாத - குறிப்பாக நடக்க முடியாத, ஏன் அடியெடுத்து வைக்க முடியாத அளவிளான மூட்டுவலி!"

அவர் உடனே, அவனுக்குப் பதில் சொன்னார்.

"மகனே, கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கைதான் அதற்குக் காரணம். அதிகமான குடி, அளவில்லாத பெண் சகவாசம், தினசரி, குளிக்கும் பழக்கமின்மை, சுகாதாரமில்லாத உணவுகளை உண்ணுதல் போன்றவைகள்தான் அதற்குக் காரணம்"

"நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்" என்று சொன்னவன், மறுபடியும் செய்தித்தாளில் மூழ்கி விட்டான்.

இப்போது, சாமியாருக்குச் சற்று வருத்தமாகிவிட்டது. அதிகப் படியான வார்த்தைகளைச் சொல்லி அவனைப் பயமுறுத்தி விட்டோமோ என்ற ஆதங்கம் ஏற்பட்டது.

உடனே அவனுடன் பேச ஆரம்பித்தார்.

"மூட்டுவலிக்கான காரணத்தை நான் கடுமையாகச் சொல்லிவிட்டேன் என்று நினைக்கிறேன். கவலைப் படாதே! எத்தனை நாட்களாக உனக்கு மூட்டு வலி?"

அந்தக் குடிகாரன் மெல்லிய குரலில் பதில் சொன்னான்:

"எனக்கு எந்த வலியும் இல்லை சாமி. நம்மூர் ஆசிரமத்தில் உள்ள பெரிய சாமியாருக்குக் கடுமையான மூட்டுவலி என்று பேப்பரில் போட்டிருக்கிறான். அதனால்தான் கேட்டேன்"

நன்றி: பல்சுவை

0 comments:

Donate a Link for Green World - NGO

You can donate a link from your blog or website for Green World - NGO, A Non-Profit Social Welfare Organization functioning at Erode.
This is what you will see.



Optionally use this Widget installer to add this link to your blogger blog.

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP