Relativism is the idea that some element or aspect of experience or culture is relative to, i.e. dependent on, some other element or aspect. Some relativists claim that humans can understand and evaluate beliefs and behaviors only in terms of their historical or cultural context. The term often refers to truth relativism, which is the doctrine that there are no absolute truths, i.e. that truth is always relative to some particular frame of reference, such as a language or a culture.
மாபெரும் புரட்சி நாயகன் சே வைப்பற்றிய "சே வாழ்வும் புரட்சியும்" ஆவணப்படம் ஒன்றை இயக்கி திரைப்படத்துறையினரின் பார்வையை தன் பக்கம் திருப்பி இருக்கிறார் ரமேஷ். சே வைப்பற்றி அதிகம் தெரியாதவர்குளுக்கும், சே வை நேசிக்கும் தோழர்களுக்கும் நல்ல விருந்து இந்தப் படம். மேலும் படிக்க...
சரத்பாபு மடிப்பாக்கத்தில் ஒரு குடிசையில் பிறந்தவர்! அவருடைய அம்மா மடிப்பாக்கத்தில் தெருவோரம் சிறு இட்லி கடை நடத்தியவர். நிர்வாக இயல் படிப்புக்கு பெயர் பெற்ற அகமதாபாத் IIM ல் MBA பட்டம் பெற்ற சரத்பாபு, புகழ் பெற்ற BITS- Pilani ல்Chemical Engineering பட்டமும் வாங்கியவர். இந்திய அளவில் இளைஞர்களின் போற்றுதலுக்குரிய அடையாளம் என்ற புகழ்ச்சி மிக்க ‘Pepsi MTV Youth Icon’ விருது பெற்றவர் சரத்பாபு.
இதற்கு முன் Youth Icon விருது பெற்றவர்கள்…
அனில் அம்பானி-2003
ராகுல் திராவிட்-2004
சாருக்கான் - 2005
தோனி - 2006
Orkut - 2007
சரத் பாபு - 2008
இவர் தென் சென்னை தொகுதியில் வேட்பாளராக போட்டி இடுகிறார்….
நாடாளுமன்றத் தேர்தலில் தென்சென்னைத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் நமது 'யூத் ஐகான்' சரத்பாபுவின் முக்கிய இலக்கே, 2025-க்குள் 'பசியில்லாத இந்தியா'வை உருவாக்குவதுதான்!
இளைஞர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் துணையோடு தென்சென்னையில் களமிறங்கும் சரத்பாபுவின் 10 முக்கிய அம்சங்கள் கொண்ட தேர்தல் அறிக்கை இதுதான்...
1. தென் சென்னையில் 20 ஆயிரத்துக்கும் மேலானோருக்கு அனைத்து வகையான தொழில்துறையிலும் வேலைவாய்ப்பு பெறும் வகையில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும்.
2. அனைத்துப் பகுதியிலும் தூய்மையானதும், சுகாதாரமானதுமான குடிநீர் வசதி. குறிப்பாக குடிசை, குடியிருப்பு பகுதிகள் மற்றும் பள்ளிகள் ஆகியவை கருத்தில் கொள்ளப்படும். உலக சுகாதார நிறுவனத் தரத்துடன் அவசர சேவைகள் பெறுவதில் எளிதாக்கப்படும். பள்ளிகளின் நிலைகள் மேம்படுத்தப்படும்.
3. மாநில அரசின் உதவித் திட்டங்களுடன் ஏழை மற்றும் ஊனமுற்ற மூத்தக் குடிமக்களுக்கு உணவு, வசிப்பிடம், சுகாதார வசதிகள் பெற வழிவகை செய்யப்படும்.
4. ஒவ்வொரு வார்டிலும் ஒரு இளைஞர் நிலையம் (யூத் ஸ்டேஷன்) அமைக்கப்படும். இதுபோல் மொத்தம் 50 நிலையங்கள் அமைக்கப்பட்டு, குடிமக்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றி எடுத்துரைக்கப்படும். இதன் மூலம் தென்சென்னையில் முறைகேடு, புகார்கள் போன்றவற்றை சரத்பாபுவிடம் நேரடியாக தொகுதி மக்கள் கொண்டு செல்ல வழிவகுக்கப்படும்.
5. செல்பேசி சேவை நிறுவனங்களை அணுகி, இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.2,400 என்ற வாடகைக்கு இரண்டு மொபைல் ஃபோன்களுடன் சேவை வழங்கும் ஜாயின்ட் பேக்கேஜ் திட்டம் கேட்கப்படும். இது, மக்களுக்கு மாதம் ரூ.100 வாடகை செலவு மட்டும் ஆகும் வகையிலேயே வழங்க முயற்சிக்கப்படும்.
6. பாதுகாப்பான போக்குவரத்துக்கு வழிவகை செய்யும் நோக்கத்தில், சாலை வசதிகள் மேம்படுத்தப்படும். மக்கள் பாதுகாப்புடன் பயணம் மேற்கொள்வதற்கு உரிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
7. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்பு உணர்வு ஏற்படும் வகையில், குடியுருப்பு நலச் சங்கங்கள் முதலிய அமைப்புகளுடன் ஒன்றிணைந்து செயல்புரிவேன். அதன் வாயிலாக, தென் சென்னை தொகுதியில் நாளொன்றுக்கு 60 மரக்கன்றுகள் நடப்படும். ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 1,08,000 மரங்கள் நடப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
8. மகளிர் மேம்பாட்டுக்கென அனைத்து இல்லத்தரசிகளுக்கும் வங்கிக் கணக்கு துவக்கப்படும். வீட்டில் உள்ள பெண்கள் வருவாய் ஈட்டும் வகையில் நல்ல வாய்ப்புகளும் திட்டங்களும் அறிமுகப்படுத்துவேன். இந்தத் திட்டத்தில் நான் நேரடியாகவே ஈடுபடுவேன்.
9. கணினி போன்ற தொழில் நுட்பத்தின் துணை கொண்டு இளம் தலைமுறையினரின் கல்வித் திறனை மேம்படுத்துவேன். இரண்டு ஆண்டுகளில் 80% கணினி அறிவு எட்டப்படுவதே இலக்கு. இதற்கென பயிற்சி நிலையங்கள் அமைக்கும் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும். ஆசிரியர்களின் உதவியுடன் கல்வித் திட்டத்தின் தரம் உயர்த்தப்படும்.
10. இரு வழி தொடர்பு முறை மூலம் நமது தொகுதியிலுள்ள ரேஷன் வினியோக குறைபாடுகள், வேளச்சேரியில் வெள்ளத் தேக்க பிரச்னை, பெருங்குடியில் குப்பை மேடுகள் மிகுதியாவது போன்ற அனைத்து பகுதியிலுள்ள பிரச்னைகளுக்கும் தேர்வு காணப்படும். அதாவது, எல்லா வித பிரச்னைகளையும் என்னிடம் நேரடியாக தெரிவித்து தீர்வு காணப்படும்.
வேட்பாளர் சரத்பாபு, புதிய நம்பிக்கை!
பள்ளி மாணவர்களுடன் தன் வாழ்க்கை குறிப்புகளை பகிர்ந்து கொள்ளும் காட்சிகள்...
ஜாலி, கேலி, அரட்டை, டேட்டிங் இத்யாதிகளுக்கான இணைய ஸ்பாட் ஆர்குட். ஆனால், இந்த சோஷியல் நெட் வொர்க்கிங் வெப்சைட்டை சமூக நலனுக்காகப் பயன்படுத்தி ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார் அலேக்யா.
ஆர்குட்டில் ‘ஒபாமா’வில் ஆரம்பித்து ‘ஓசி டீ’ வரைக்கும் பலப் பல விஷயங்களுக்கு ‘கம்யூனிட்டி’கள் எனப்படும் ரசிகர் வட்டங்கள் இருக்கும். அதில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் தங்களுக்குள் விவாதித்துக்கொண்டு இருப்பார்கள். அதுபோன்ற அரட்டை கம்யூனிட்டிகளுக்கு மத்தியில், ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவுவதற்காக அலேக்யா உருவாக்கிய சாரல் கம்யூனிட்டியில் இப்போ 5,865 (22.04.2009 அன்று) உறுப்பினர்கள்!
”எங்க குடும்பத்தில் பிறந்த நாள், திருமண நாள் மாதிரி சந்தோஷங்களை ஆதரவற்றோர் இல்லங்களில்தான் கொண்டாடுவோம். ஆர்குட்டில் யார் வேண்டுமானாலும் கம்யூனிட்டி ஆரம்பிக்கலாம்னு வாய்ப்பு கிடைச்சப்போ, என் சின்னக் கனவான சாரலை ஆரம்பிச்சேன். இது போன்ற கம்யூனிட்டியில் சேர ஆர்வம் காட்டுவாங்களான்னு ஒரு சந்தேகம் இருந்தது. ஆனா, ஆரம்பிச்சதுமே ஆயிரக்கணக்கில் ஹிட் அடிச்சிருச்சு சாரல். இப்போ அதில் இருந்து 60 உறுப்பினர்கள் சேர்ந்து, ‘சாரல்’ என்கிற ஒரு தன்னார்வத் தொண்டு அமைப்பைத் தொடங்கியிருக்கோம். ஒன்றரை வருஷங்களா ஈரமான இதயங்களின் இணைய இல்லமா இருக்கு சாரல்!” என்று பூரிக்கும் அலேக்யாவின் வயது இருபத்து நாலு. இன்ஜினீயரிங் முடித்துவிட்டு எம்.பி.ஏ., படிப்பதற்காககக் காத்திருக்கிறார்.
ஒரு நபரை மலைப் பிரதேசங்களுக்கு சென்று வரும்படி அவனது மனோதத்துவ நிபுணர் கூறினார்.
அவன் எப்போதுமே இதைப்பற்றி, அதைப்பற்றி குறை கூறிக் கொண்டேயிருந்தான். எப்போதும் ஏதாவது கேள்வி கேட்டவாறு இருந்தான். எதோடும் அவன் சுகமாக இருந்ததே இல்லை - இல்லத்தில் சொன்னார்கள்.
அடுத்த நாள் மனோதத்துவ நிபுணருக்கு ஒரு தந்தி வந்து சேர்ந்தது. அதில் அந்த நபர் சொல்லியிருந்தது:
"நான் இங்கு சந்தோஷமாக இருக்கிறேன். ஏன்?"
ஏன் என்று கேட்காமல் உங்களால் சந்தோசத்தைக் கூட ஏற்றுக் கொள்ள முடியாது. எதையுமே ஏற்றுக் கொள்ள மனத்தால் முடியாது. அது முடியவே முடியாது. 'ஏன்' என்பது உடனே அங்கு வந்துவிடும். அந்த 'ஏன்' என்ற கேள்வி எல்லாத்தையும் அழித்துவிடும். எனவேதான் எல்லா மதங்களும் நம்பிக்கையை வலியுறுத்துகின்றன. நம்பிக்கையின் அர்த்தம் இதுதான், ஏன் என்று கேட்க மனத்தை அனுமதிக்காதது.
விசுவாசம் என்பது நம்பிக்கையல்ல; ஒரு கோட்பாட்டில் நம்பிக்கை வைப்பதல்ல. விசுவாசம் என்பது வாழ்க்கையிலேயே நம்பிக்கை வைப்பது. விசுவாசம் என்பது பைபிளையோ, குரானையோ, கீதையையோ நம்புவதல்ல. விசுவாசம் என்பது ஒரு நம்பிக்கை... சந்தேகப்படாத நம்பிக்கை. நம்பிக்கையோடு இருப்பவர்கள் மட்டும்தான், நம்பக்கூடிய தன்மை உடையவர்களால் தான் வாழ்க்கை என்றால் என்ன, சாவு என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள முடியும்.
நமக்கு வாழ்க்கை என்பது ஒரு பிரச்சினை. எனவே சாவும் ஒரு பிரச்சனையாகத்தான் இருக்கும். நாம் தொடர்ந்து அதைத் தீர்க்க முயல்கிறோம். நேரத்தையும் சக்தியையும் பிரச்சினையை தீர்ப்பதில் செலவிடுகிறோம். அது ஏற்கனவே தீர்க்கப்பட்டு விட்டது. அது பிரச்சனையாகவே இருந்ததில்லை. பிரச்சினையை உருவாக்கியது நீங்கள்தான்.
நட்சத்திரங்களைப் பாருங்கள், பிரச்சினை அங்கே இல்லை. மரங்களைப் பாருங்கள், பிரச்சினை அங்கே இல்லை. உங்களைச் சுற்றிப் பாருங்கள்... மனிதன் இங்கே இல்லாமல் இருந்தால் ஏற்கனவே எல்லாமே தீர்க்கப்பட்டு விட்டிருக்கும். பிரச்சினை எங்கே இருக்கிறது? உலகை யார் படைத்தது என்று மரங்கள் கேட்பதில்லை. அவை வெறுமனே அனுபவிக்கின்றன. உலகை யார் உருவாக்கியது என்று கேட்பது எவ்வளவு முட்டாள்தனம்? யார் படைத்திருந்தாலும் என்ன மாற்றம் நிகழ்ந்து விடப்போகிறது. A B C D ? என்ன வித்தியாசம் வந்துவிடப் போகிறது? அது உருவாக்கப் பட்டிருந்தாலும் உருவாக்கப் பட்டிருக்காவிட்டாலும் என்ன வித்தியாசம் வந்துவிடப் போகிறது? 'A' உலகைப் படைத்திருந்தாலோ, 'B' உலகைப் படைத்திருந்தாலோ அல்லது யாருமே உலகைப் படைக்காதிருந்தாலோ உங்களை எப்படி அது பாதிக்கும்? நீங்கள் இதே தான், வாழ்க்கையும் இதே தான். பிறகு ஏன் தேவையற்ற, சம்பந்தமில்லாத ஒரு கேள்வியைக் கேட்டு அதில் மாட்டிக் கொள்ள வேண்டும்.
நான் ஒரு கதை கேட்டிருக்கிறேன். கிராமத்திலுள்ள ஏழைப்பையன் ஒருவனுக்கு நேர்ந்தது அது. அவன் ஒரு பிச்சைக்காரனின் மகன். இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பான். அவன் எந்த அளவுக்கு ஆரோக்கியமாக இருந்தான் என்றால், அரசனின் யானை வீதியில் செல்லும் போது, அவனால் அதன் வாலைப் பிடித்து அந்த யானையை நகரவிடாமல் செய்ய முடியும்.
சில சமயங்களில் அரசனுக்கே தர்மசங்கடமாகி விடும். ஏனெனில் அவ்ர் யானை மீது உட்கார்ந்து கொண்டிருப்பார், மந்தை முழுவதும் மக்கள் கூடி நின்று இக்காட்சியைப் பார்த்து சிரிப்பார்கள். எல்லாம் இந்த பிச்சைக்காரனின் மகனால் விளைவது.
அரசர் தன் மந்திரியை அழைத்தார். "ஏதாவதுசெய்தே ஆகவேண்டும். இது எனக்கு பெரிய அவமானம். கிராமத்தின் வ்ழியாக செல்வதற்கே நான் பயப்பட வேண்டியிருக்கிறது. அந்த பையன் சில சமயங்களில் வேறு கிராமங்களுக்கும் வந்து விடுகிறான்! எங்கே வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் அவன் யானையின் வாலைப் பிடித்து விடுகிறான், அதுவும் நகராமல் நின்று விடுகிறது. அந்தப் பையன் அதிக சக்தி வாய்ந்தவனாக இருக்கிறான். அவன் சக்தியை நீக்க ஏதாவது செய்தாக வேண்டும்"
மந்திரி கூறினார்: "நான் சென்று அறிவாளிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும். ஏனெனில் அவன் சக்தியை எப்படி நீக்க வேண்டும் என்று எனக்குத் தெரியாது. அவன் ஒரு பிச்சைக்காரன். அவன் கடை வைத்திருப்பவன் என்றால், அது அவன் சக்தியை உறிஞ்சி விடும். தொடக்கப்பள்ளீயில் அவன் ஒரு ஆசிரியராக இருந்தான் என்றால் அப்பொழுதும் அவன் சக்தி நீக்கப்பட்டு விடும். ஒரு அலுவலகத்தில் அவன் வேலை செய்தான் என்றாலும், அவன் சக்தி குறைந்து விடும். ஆனால் அவனுக்குச் செய்வதற்கு ஒன்றுமில்லை. அவன் வேடிக்கைக்காக வாழ்கிறான், மக்கள் அவனை விரும்புகிறார்கள், அவனுக்கு உணவிடுகிறார்கள், அதனால் அவனுக்கு உணவிற்கும் பஞ்சமில்லை. அவன் மகிழ்ச்சியாயிருக்கிறான், சாப்பிட்டுவிட்டு தூங்குகிறான். அதனால் இது மிகவும் கடினம். ஆனாலும் நான் செல்கிறேன்."
அதனால் ஒரு வயதான அறிவாளியிடம் சென்றார்.
அவர் கூறினார்: "ஒன்று செய்யுங்கள். அந்தப் பையனிடம் சென்று நீங்கள் அவனுக்குத் தினமும் ஒரு தங்கக்காசு கொடுப்பதாகவும், அதற்காக அவன் ஒரு சிறிய வேலை செய்ய வேண்டும் என்றும் கூறுங்கள் - உண்மையிலேயே, அது சிறிய வேலைதான். அவன் கிராமத்திலுள்ள கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வைக்க வேண்டும். அவ்வளவுதான். நீங்கள் அவனுக்கு தினமும் ஒரு தங்கக்காசு தருவீர்கள்."
மந்திரி கேட்டார்: "ஆனால் இது எப்படி உதவும்? இது அவனை இன்னும் அதிக சக்தி படைத்தவனாக வேண்டுமானால் மாற்றலாம். ஒரு பணம் கிடைத்தவுடன் அவன் இன்னும் அதிகமாக சாப்பிடுவான். பிச்சை எடுப்பதைப் பற்றிக் கூட கவலைப்பட மாட்டான்."
அந்த அறிவாளி கூறினார்: "கவலைப்படாதீர்கள், நான் சொன்னதை மட்டும் செய்யுங்கள்."
அவ்வாறே செய்யப்பட்டது. அடுத்தவாரம், அரசர் கடந்து செல்லும் போது, அந்த பையன் யானையை நிறுத்த மயற்சித்து தோல்வியடைந்தான். அதனுடன் இழுத்துச் செல்லப்பட்டான்.
என்ன நடந்தது? கவனம் நுழைந்துவிட்டது. கவலை நுழைந்துவிட்டது. அவன் ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருக்க வேண்டும் - ஒரு நாளின் இருபத்துநான்கு மணி நேரமும், கோயிலுக்கு சென்று, விளக்கேற்றி வைக்க வேண்டும் என்பதை, அவன் ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருக்க வேண்டும். அது கவலையாக மாறி, அவன் முழு இருத்தலைப் பிரித்து விடுகிறது. தூங்கும் போது கூட அது மாலை என்பதைப் போல் கனவு கணத் தொடங்கி விடுகிறான்.
என்ன செய்து கொண்டிருக்கிறாய்? கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி விட்டு, உன் ரூபாயைப் பெற்றுக் கொள். பிறகு அவன் அந்தத் தங்க ரூபாய்களைச் சேகரிக்கத் தொடங்கிவிடுகிறான்.
ஏழு வைத்திருந்தான், இப்போது எட்டு, பிறகு இவ்வளவு நாட்களுக்குள் நூறு ரூபாய்கல்ளைப் பெற்றுவிட முடியும் என்ற கணக்குப் போட துவங்கி விடுவான் - பிறகு அது இருநூறாகும். கணக்கு வந்தவுடன் அங்கு வேடிக்கை மறந்து விடுகிறது. அதுவும் அவன் செய்ய வேண்டியது மிகச்சிறிய வேலைதான், விளக்கேற்ற வேண்டும். ஒரு நிமிட வேலைதான், அவ்வளவு கூட இல்லை, ஒரு கணத்தில் செய்துவிடக் கூடியது. ஆனால் அது கவலையாகி விட்டது. அது அவனது சக்தியை எல்லாம் நீக்கிவிட்டது.
You can donate a link from your blog or website for Green World - NGO, A Non-Profit Social Welfare Organization functioning at Erode.
This is what you will see.
Optionally use this Widget installer to add this link to your blogger blog.