வேட்பாளர் சரத்பாபு, புதிய நம்பிக்கை!
Thursday, April 23, 2009
சரத்பாபுவின் கேள்வி பதில் பேட்டி - தமிழில்
சரத்பாபு மடிப்பாக்கத்தில் ஒரு குடிசையில் பிறந்தவர்! அவருடைய அம்மா மடிப்பாக்கத்தில் தெருவோரம் சிறு இட்லி கடை நடத்தியவர். நிர்வாக இயல் படிப்புக்கு பெயர் பெற்ற அகமதாபாத் IIM ல் MBA பட்டம் பெற்ற சரத்பாபு, புகழ் பெற்ற BITS- Pilani ல் Chemical Engineering பட்டமும் வாங்கியவர். இந்திய அளவில் இளைஞர்களின் போற்றுதலுக்குரிய அடையாளம் என்ற புகழ்ச்சி மிக்க ‘Pepsi MTV Youth Icon’ விருது பெற்றவர் சரத்பாபு.
இதற்கு முன் Youth Icon விருது பெற்றவர்கள்…
அனில் அம்பானி-2003
ராகுல் திராவிட்-2004
சாருக்கான் - 2005
தோனி - 2006
Orkut - 2007
சரத் பாபு - 2008
இவர் தென் சென்னை தொகுதியில் வேட்பாளராக போட்டி இடுகிறார்….
சரத்பாபு பற்றி யூத் விகடனிலிருந்து...
நாடாளுமன்றத் தேர்தலில் தென்சென்னைத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் நமது 'யூத் ஐகான்' சரத்பாபுவின் முக்கிய இலக்கே, 2025-க்குள் 'பசியில்லாத இந்தியா'வை உருவாக்குவதுதான்!
இளைஞர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் துணையோடு தென்சென்னையில் களமிறங்கும் சரத்பாபுவின் 10 முக்கிய அம்சங்கள் கொண்ட தேர்தல் அறிக்கை இதுதான்...
1. தென் சென்னையில் 20 ஆயிரத்துக்கும் மேலானோருக்கு அனைத்து வகையான தொழில்துறையிலும் வேலைவாய்ப்பு பெறும் வகையில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும்.
2. அனைத்துப் பகுதியிலும் தூய்மையானதும், சுகாதாரமானதுமான குடிநீர் வசதி. குறிப்பாக குடிசை, குடியிருப்பு பகுதிகள் மற்றும் பள்ளிகள் ஆகியவை கருத்தில் கொள்ளப்படும். உலக சுகாதார நிறுவனத் தரத்துடன் அவசர சேவைகள் பெறுவதில் எளிதாக்கப்படும். பள்ளிகளின் நிலைகள் மேம்படுத்தப்படும்.
3. மாநில அரசின் உதவித் திட்டங்களுடன் ஏழை மற்றும் ஊனமுற்ற மூத்தக் குடிமக்களுக்கு உணவு, வசிப்பிடம், சுகாதார வசதிகள் பெற வழிவகை செய்யப்படும்.
4. ஒவ்வொரு வார்டிலும் ஒரு இளைஞர் நிலையம் (யூத் ஸ்டேஷன்) அமைக்கப்படும். இதுபோல் மொத்தம் 50 நிலையங்கள் அமைக்கப்பட்டு, குடிமக்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றி எடுத்துரைக்கப்படும். இதன் மூலம் தென்சென்னையில் முறைகேடு, புகார்கள் போன்றவற்றை சரத்பாபுவிடம் நேரடியாக தொகுதி மக்கள் கொண்டு செல்ல வழிவகுக்கப்படும்.
5. செல்பேசி சேவை நிறுவனங்களை அணுகி, இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.2,400 என்ற வாடகைக்கு இரண்டு மொபைல் ஃபோன்களுடன் சேவை வழங்கும் ஜாயின்ட் பேக்கேஜ் திட்டம் கேட்கப்படும். இது, மக்களுக்கு மாதம் ரூ.100 வாடகை செலவு மட்டும் ஆகும் வகையிலேயே வழங்க முயற்சிக்கப்படும்.
6. பாதுகாப்பான போக்குவரத்துக்கு வழிவகை செய்யும் நோக்கத்தில், சாலை வசதிகள் மேம்படுத்தப்படும். மக்கள் பாதுகாப்புடன் பயணம் மேற்கொள்வதற்கு உரிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
7. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்பு உணர்வு ஏற்படும் வகையில், குடியுருப்பு நலச் சங்கங்கள் முதலிய அமைப்புகளுடன் ஒன்றிணைந்து செயல்புரிவேன். அதன் வாயிலாக, தென் சென்னை தொகுதியில் நாளொன்றுக்கு 60 மரக்கன்றுகள் நடப்படும். ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 1,08,000 மரங்கள் நடப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
8. மகளிர் மேம்பாட்டுக்கென அனைத்து இல்லத்தரசிகளுக்கும் வங்கிக் கணக்கு துவக்கப்படும். வீட்டில் உள்ள பெண்கள் வருவாய் ஈட்டும் வகையில் நல்ல வாய்ப்புகளும் திட்டங்களும் அறிமுகப்படுத்துவேன். இந்தத் திட்டத்தில் நான் நேரடியாகவே ஈடுபடுவேன்.
9. கணினி போன்ற தொழில் நுட்பத்தின் துணை கொண்டு இளம் தலைமுறையினரின் கல்வித் திறனை மேம்படுத்துவேன். இரண்டு ஆண்டுகளில் 80% கணினி அறிவு எட்டப்படுவதே இலக்கு. இதற்கென பயிற்சி நிலையங்கள் அமைக்கும் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும். ஆசிரியர்களின் உதவியுடன் கல்வித் திட்டத்தின் தரம் உயர்த்தப்படும்.
10. இரு வழி தொடர்பு முறை மூலம் நமது தொகுதியிலுள்ள ரேஷன் வினியோக குறைபாடுகள், வேளச்சேரியில் வெள்ளத் தேக்க பிரச்னை, பெருங்குடியில் குப்பை மேடுகள் மிகுதியாவது போன்ற அனைத்து பகுதியிலுள்ள பிரச்னைகளுக்கும் தேர்வு காணப்படும். அதாவது, எல்லா வித பிரச்னைகளையும் என்னிடம் நேரடியாக தெரிவித்து தீர்வு காணப்படும்.
வேட்பாளர் சரத்பாபு, புதிய நம்பிக்கை!
பள்ளி மாணவர்களுடன் தன் வாழ்க்கை குறிப்புகளை பகிர்ந்து கொள்ளும் காட்சிகள்...
சரத் பாபு அவர்களின் Orkut Profile
சரத் பாபுவின் இணையதளம்
சரத்பாபுவின் கேள்வி பதில் பேட்டி - தமிழில்
Comments about Sarath in Some Blogs:
5.Kanna
9. rammohan1985
4 comments:
மிக அருமையான பதிவு நன்பா
என் பிளாக்கை உங்க பதிவில் சேர்த்தறக்கு நன்றி
நன்பர்கள் சிலர் எதிர் பிரச்சாரம் செய்ராங்க
சர்க்கரை சுரேஷ் அவர்களே,
உங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
எதிர்ப் பிரச்சாரம் ஒரு பக்கம் நடக்கட்டும். அதுவும் மறைமுகமாக கூடுதல் வலு சேர்க்கும் நண்பர் அவர்களே! எதுக்குமே ஒரு ஆரம்பம் வேண்டாமா? நான் அவரின் வீடியோ பார்த்ததில், நிச்சயம் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும், இளைஞர்களிடையே இருக்கும் அரசியல் தயக்கத்தை தகர்க்கும் புரட்சிக்கும் வித்திடும் என உறுதியாக நம்புகிறேன்.
இது போல இளைஞர்கள் வருவது அரசியலில் நல்ல மாற்றத்தை கொண்டுவரும் இல்லையா.
எல்லாத்துலையும் எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும்.
நல்ல பதிவு தம்பி
@கார்த்திக்
அண்ணா நன்றி...
Post a Comment