Sunday, April 12, 2009
ஏன் என்று கேட்காமல் உங்களால் சந்தோசத்தைக் கூட ஏற்றுக் கொள்ள முடியாது. எதையுமே ஏற்றுக் கொள்ள மனத்தால் முடியாது. அது முடியவே முடியாது. 'ஏன்' என்பது உடனே அங்கு வந்துவிடும். அந்த 'ஏன்' என்ற கேள்வி எல்லாத்தையும் அழித்துவிடும். எனவேதான் எல்லா மதங்களும் நம்பிக்கையை வலியுறுத்துகின்றன. நம்பிக்கையின் அர்த்தம் இதுதான், ஏன் என்று கேட்க மனத்தை அனுமதிக்காதது.ஒரு நபரை மலைப் பிரதேசங்களுக்கு சென்று வரும்படி அவனது மனோதத்துவ நிபுணர் கூறினார்.
அவன் எப்போதுமே இதைப்பற்றி, அதைப்பற்றி குறை கூறிக் கொண்டேயிருந்தான். எப்போதும் ஏதாவது கேள்வி கேட்டவாறு இருந்தான். எதோடும் அவன் சுகமாக இருந்ததே இல்லை - இல்லத்தில் சொன்னார்கள்.
அடுத்த நாள் மனோதத்துவ நிபுணருக்கு ஒரு தந்தி வந்து சேர்ந்தது. அதில் அந்த நபர் சொல்லியிருந்தது:
"நான் இங்கு சந்தோஷமாக இருக்கிறேன். ஏன்?"
விசுவாசம் என்பது நம்பிக்கையல்ல; ஒரு கோட்பாட்டில் நம்பிக்கை வைப்பதல்ல. விசுவாசம் என்பது வாழ்க்கையிலேயே நம்பிக்கை வைப்பது. விசுவாசம் என்பது பைபிளையோ, குரானையோ, கீதையையோ நம்புவதல்ல. விசுவாசம் என்பது ஒரு நம்பிக்கை... சந்தேகப்படாத நம்பிக்கை. நம்பிக்கையோடு இருப்பவர்கள் மட்டும்தான், நம்பக்கூடிய தன்மை உடையவர்களால் தான் வாழ்க்கை என்றால் என்ன, சாவு என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள முடியும்.
நமக்கு வாழ்க்கை என்பது ஒரு பிரச்சினை. எனவே சாவும் ஒரு பிரச்சனையாகத்தான் இருக்கும். நாம் தொடர்ந்து அதைத் தீர்க்க முயல்கிறோம். நேரத்தையும் சக்தியையும் பிரச்சினையை தீர்ப்பதில் செலவிடுகிறோம். அது ஏற்கனவே தீர்க்கப்பட்டு விட்டது. அது பிரச்சனையாகவே இருந்ததில்லை. பிரச்சினையை உருவாக்கியது நீங்கள்தான்.
நட்சத்திரங்களைப் பாருங்கள், பிரச்சினை அங்கே இல்லை. மரங்களைப் பாருங்கள், பிரச்சினை அங்கே இல்லை. உங்களைச் சுற்றிப் பாருங்கள்... மனிதன் இங்கே இல்லாமல் இருந்தால் ஏற்கனவே எல்லாமே தீர்க்கப்பட்டு விட்டிருக்கும். பிரச்சினை எங்கே இருக்கிறது? உலகை யார் படைத்தது என்று மரங்கள் கேட்பதில்லை. அவை வெறுமனே அனுபவிக்கின்றன.
உலகை யார் உருவாக்கியது என்று கேட்பது எவ்வளவு முட்டாள்தனம்? யார் படைத்திருந்தாலும் என்ன மாற்றம் நிகழ்ந்து விடப்போகிறது. A B C D ? என்ன வித்தியாசம் வந்துவிடப் போகிறது? அது உருவாக்கப் பட்டிருந்தாலும் உருவாக்கப் பட்டிருக்காவிட்டாலும் என்ன வித்தியாசம் வந்துவிடப் போகிறது? 'A' உலகைப் படைத்திருந்தாலோ, 'B' உலகைப் படைத்திருந்தாலோ அல்லது யாருமே உலகைப் படைக்காதிருந்தாலோ உங்களை எப்படி அது பாதிக்கும்? நீங்கள் இதே தான், வாழ்க்கையும் இதே தான். பிறகு ஏன் தேவையற்ற, சம்பந்தமில்லாத ஒரு கேள்வியைக் கேட்டு அதில் மாட்டிக் கொள்ள வேண்டும்.
-ஓஷோ
2 comments:
என்னப்பா ஓஷோ பக்தனாயிட்டையா
:)
Post a Comment