ராகா.காம் இப்ப சூப்பரோ சுப்பர்!

Sunday, May 10, 2009

ராகா.காம் இனையதளம் இசை ரசிகர்களின் பொக்கிசம். இப்பொது இதை மிகவும் நன்றாக வடிவமைத்து இருக்கிறார்கள். PLAYER முதற்கொண்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதிகள், டிவிட்டர், சமூக தளங்களுடன் இணைப்பு என நிறைய வசதிகளுடனும் புதுப் பொலிவுடனும் இருக்கிறது.

இதற்கு முன்னால் நாம் பாடல்களை வெவ்வேறு படங்களில் இருந்து PLAYLIST-ல் சேர்த்து, அவற்றை வரிசையாக கேட்க முடியாது என்று நினைக்கிறேன். ஆனால் இப்பொது QUICK LIST வசதி மூலம் இது சாத்தியம்.
இதன் மூலம் நீங்கள் உங்கள் விருப்பமான பாடல்களை ஒவ்வொன்றாக லிஸ்டில் சேர்த்துக் கொள்ளலாம். இதை நீங்கள் வலது கீழ் மூலையில் பார்க்கலாம். அங்கேயே ப்ளே வசதியும் தரப் பட்டிருக்கிறது.ஆனால் நீங்கள் பாடல் பாடிக்கொண்டிருக்கும் போது அதில் மேலும் இடைச் செருக முடியாது. கடைசியாக இணைத்த பாடலுடன் அத்தனையையும் சேர்த்து புதிதாகத்தான் ப்ளே செய்ய வேண்டும்.

மேலும் PLAYLIST-ல் நம் விருப்ப பாடல்களுக்கு தாவிக்கொள்ளலாம், SUFFLE, REPEAT வசதியும் இருக்கிறது. கிட்டத்தட்ட நம் வின்டோஸ் பிளேயர், வின் ஆம்ப் போல...நான் பட்ட கஷ்டங்கள்:

நான் ஹரிஹரன் பாடின கொள்முகல் மலரே பாடலை தேட முனைந்தேன். என்ன படம் என்று தெரியவில்லை. பாட்டு என்ன என்றும், பாடினவர் யார் என்றும் மட்டும் தான் தெரியும். சரி என்று Tamil > Singer > Hariharan என்ற வரிசையில் நுழைந்தேன். ஆனால் அங்கே பாடல்கள் அகரவரிசைப்படி இல்லை. அப்படி வரிசைப் படுத்த வழியும் இல்லை. இதற்குமுன் இந்த வசதி இருந்ததாக ஞாபகம்! இருந்தாலும் பாடலின் மீதான ஈர்ப்பினால் இதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. முடிவில் 13 பக்கங்களில் ஒவ்வொரு பக்கமாக தேட முற்படுகையில் 3 வது பக்கத்திலேயே அகப்பட்டு விட்டது.

மற்றபடி ராகா.காம் பற்றி உங்களுக்கே தெரியும். நன்றி!

1 comments:

Anonymous said...

இலங்கையில் ஒரே இரவில் 3000க்கும் மேற்பட்ட தமிழர்கள் பலி.
http://www.ponmaalai.com/2009/05/2000.html

Donate a Link for Green World - NGO

You can donate a link from your blog or website for Green World - NGO, A Non-Profit Social Welfare Organization functioning at Erode.
This is what you will see.Optionally use this Widget installer to add this link to your blogger blog.

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP