கல்வி உரிமை சட்டம் அமல்படுத்த ரூ.1.78 லட்சம் கோடி
Tuesday, October 6, 2009
அடுத்த ஐந்தாண்டுகளில், கல்வி பெறும் உரிமை சட்டத்தை அமல்படுத்த, மத்திய அரசு 1.78 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு செலவிட வேண்டியுள்ளது.
இந்த புதிய சட்டம், அடுத்த கல்வியாண்டில் இருந்து அமலுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கல்வி பெறுவது என்பது அனைவரின் அடிப்படை உரிமை என்றாலும், அதை உத்தரவாக செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதுகுறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:
கல்வி பெறும் உரிமை சட்டத்தை அமல்படுத்த, மொத்தம் 1.78 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இதில், 50 ஆயிரம் கோடி ரூபாய், சர்வ சிக்ச அபியான் திட்டத்தில் இருந்து மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்க உள்ளன. இதனால், மொத்த தேவை 1.28 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
பன்னிரெண்டாவது ஐந்தாண்டு திட்டத்தில், சர்வ சிக்ச அபியான் திட்டத்திற்கு, 60 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிதி ஒதுக்கப்பட்டாலும், இன்னும் 68 ஆயிரம் கோடி ரூபாய் தேவை. எனவே, இது தொடர்பான அறிக்கையை நிதி அமைச்சகத்துக்கும், 13வது நிதி ஆணையத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து, பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, சர்வ சிக்ஷா அபியான் திட்டத்திற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் 60:40 என்ற வீதத்தில் நிதி ஒதுக்குகின்றன. இது 12வது திட்டத்தில், 50:50 என்ற வீதத்தில் மாறும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
நன்றி: தினமலர்
2 comments:
தலைவா!
வரிசையா ஏன் இந்த காப்பி பேஸ்ட்!
டரியலாவுது!
அண்ணா மன்னிக்கவும். இத என்னால தவிர்க்க இயலாது. என்னுடைய சொந்த சரக்காக இருந்தால் அது சிவாஜி என்ற வகைக்குள் இருக்கும். இங்கு நான் பதிவிடுவதில் 95% காப்பி பேஸ்ட் தான். தாங்கள் என்னால் ஏமாற்றப்பட்டிருந்தால் வருந்துகிறேன்!
Post a Comment